வீட்டில் விளக்கேற்றுவதற்கு உகந்த திரி இது தான் - கட்டாயம் அறிந்துக்கொள்ளுங்கள்
வீட்டில் தீபம் ஏற்றினால் பலரது வாழ்க்கையும் செல்வ செழிப்புடன் இருக்கும். என்ன எண்ணெய் பயன்படுத்தலாம், எந்த திரியை பயன்படுத்தலாம், எந்த விளக்கில் ஏற்றலாம், எந்த திசையில் வைக்க வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும்.
எனவே வீட்டில் லட்சுமி கடாக்ஷம் கிடைப்பதற்கு எந்த திரியை பயன்படுத்தலாம் எனவும் எந்த திசையில் விளக்கேற்றலாம் எனவும் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
திரிகளும் பயன்களும்
தாமரைத் தண்டு திரி - முன்வினை பாவத்தை நீக்கும்.
பஞ்சு திரி - வீட்டில் மங்களத்தை உருவாக்கும்.
வாழைத்தண்டு திரி - மன அமைதியை தருவதோடு புத்திர பாக்கியத்தையும் வழங்குகிறது.
வெள்ளெருக்கம் திரி - செய்வினை நீக்கி நீண்ட ஆயுளுடன் வாழ உதவும்.
என்ன எண்ணெய் பயன்படுத்தலாம்?
சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், சமைப்பதற்கு பயன்படுத்திய எண்ணெய் பயன்படுத்தக் கூடாது.
நெய், நல்லெண்ணை மற்றும் தேங்காய் எண்ணெய் வைத்து விளக்கேற்றினால் நல்லது.
நெய்யில் விளக்கேற்றினால் செல்வம் பெருக்கும், நினைத்த காரியம் நிறைவேறும், ஆரோக்கியம் மேம்படும்.
இலுப்பை எண்ணெய் இருந்தால் அதிலும் விளக்கேற்றலாம். அது அனைத்து காரியத்திலும் வெற்றியை ஈட்டி தரும்.
எந்த திசையை நோக்கி விளக்கேற்ற வேண்டும்?
கிழக்கு திசையை நோக்கி இருக்கும் முகத்தில் விளக்கேற்றினார் துன்பங்கள் நீங்கும்.
மேற்கு திசை முகத்தில் ஏற்றினல் சகோதரர்களிடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.
வட திசையில் ஏற்றினால் அனைத்து செல்வ வளமும் கிடைக்கும்.
தென் திசையை நோக்கி இருக்கும் முகத்தில் ஒரு போதும் விளக்கேற்றக் கூடாது. அதையும் மீறி ஏற்றினால் கடன் தொல்லையால் அவதிப்படுவீர்கள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.