எலுமிச்சை தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?
கோயிலுக்கு சென்று தெய்வத்தின் முன் தீபம் ஏற்றி வழிபடுவோம், தோஷ பரிகாரங்களுக்காக பலரும் தீபத்தை ஏற்றுவார்கள்.
இதில் முக்கியமானது எலுமிச்சம் பழ தீபம், இதற்கு தீய சக்திகளை விரட்டும் சக்தி உண்டு, ஆனால் இத்தீபத்தை ஏற்றுவதற்கு என்று பல விதிமுறைகள் உள்ளன.
நீங்கள் நினைத்த நேரத்தில் எலுமிச்சம் பழ தீபத்தை ஏற்றக்கூடாது, பார்வதி தேவிக்கு மிகவும் பிடித்தமான எலுமிச்சம் பழ தீபத்தை குஜ தோஷம், காலசர்ப்ப தோஷம், வியாபாரம், குடும்பம், பொருளாதார பிரச்சனைகள் உள்ளவர்கள் ஏற்றலாம்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் மட்டுமே எலுமிச்சம் பழ தீபத்தை ஏற்ற வேண்டும், கிராம பெண் தெய்வங்களின் கோயில்களில் ஏற்றலாம்.
ராகுகால துர்கா பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வரலாம், எலுமிச்சம் பழத்தை சரி பாதியாக நறுக்கி பிழிந்துவிட்டு, அதன் மூடியை திருப்பி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபத்தை ஏற்ற வேண்டும்.
எலுமிச்சம் பழத்தை நறுக்கும் போது ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தையும், அதன் மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும்போது மகாலட்சுமிக்கு உரிய, ‘க்ரீம்’ என்ற மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும்.
நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது, ‘க்லீம்’ என்ற தேவியின் மந்திரத்தையும், தீபத்தை ஏற்றும்போது, ‘சாமுண்டாயை விச்சே’ என்று சொல்ல வேண்டும்.
தீப ஒளி அம்மனை நோக்கி இருக்க வேண்டும், ஒருபோதும் அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்ற வேண்டாம்.
நீங்கள் வசிக்கும் கிராமத்தின் எல்லைக்குள் மட்டுமே ஏற்ற வேண்டும், அடுத்த இடங்களில் ஏற்றக்கூடாது.
விளக்கு ஏற்றிய பின்னர் மூன்று சுற்றுகள் வலம்வந்து தரிசிக்க வேண்டும், வீட்டிற்கு வந்த பின்னரும் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
தீபம் அணையும் வரை வெளியே செல்லக்கூடாது, இதை ஒன்பது வாரங்கள் கடைபிடித்து வந்தால் பார்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.