"சிவாய நம" என்பதன் அர்த்தம்
By Yashini
சிவபெருமானை போற்றும் திருநாமம், "சிவாய நம" என்பதாகும்.
சிவ நாமங்களில் உயர்ந்தது "சிவாய நம" என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
"சிவாய நம என்பதை, 'சிவய நம' என்றே உச்சரிக்க வேண்டும்.
"சி'' என்றால் சிவம், "வ" என்றால் திருவருள், "ய'' என்றால் ஆன்மா, "ந" என்றால் திரோத மலம், ''ம" என்றால் ஆணவ மலம்.
திரோத மலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோத மலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.
"சிவாய நம" என்று உள்ளம் உருக கூறினால், இந்தப் பிறவியில் இருந்து அவர் விடுபடுவார் என்பதே இதன் பொருள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |