16 வகை செல்வங்கள் தரும் சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்
நம்முடைய இந்து மதத்தில் எந்த ஒரு புதிய தொடக்கம் தொடங்குவதற்கு முன்னர் கட்டாயமாக நாம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து தான் அந்த காரியத்தை தொடங்குவோம்.
அதாவது வீடுகளில் செய்யக்கூடிய பலகாரமாக இருந்தாலும் சரி வீடுகளில் நடத்தக்கூடிய ஒரு மிகப்பெரிய அளவிலான சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் கட்டாயமாக விநாயகப் பெருமானை முதலில் வணங்கி விட்டு தான் அந்த ஒரு காரியத்தை நாம் தொடங்குகிறோம்.
காரணம் நாம் செய்யக்கூடிய செயல்கள் எந்த ஒரு தடையும் தடங்களும் இல்லாமல் நிறைவடைய வேண்டும் என்பதால் நம் முதலில் விநாயகரை சரண் அடைகின்றோம். அதாவது தடைகளை போக்கும் வல்லமை பெற்றவர் விநாயகர்.
அப்படியாக நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாமல், பொருளாதார கஷ்டம் இல்லாமல், நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்றால் கட்டாயமாக நாம் விநாயகர் பெருமானை தினமும் பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
அவ்வாறு ஒருவர் விநாயகரை பற்றி கொண்டு தினமும் பூஜை செய்து வழிபாடு செய்கிறார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் தடைகள் என்ற ஒரு வார்த்தைக்கே இடமில்லாத ஒரு நிலை உருவாகும்.
அதோடு விநாயகப் பெருமானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கை இன்னும் மேன்மை அடைந்து உயரத்தை பெறுகிறது. அப்படியாக நம் வீடுகளில் தினமும் சொல்ல வேண்டிய விநாயகருடைய 16 திருநாமங்களை பற்றி பார்ப்போம்.

விநாயகரின் 16 திருநாமங்கள்:
ஓம் சுமுகாய நம: மங்களமான முகம் உடையவன்
ஓம் ஏக தந்தாய நம: ஒற்றை தந்தம் உடையவன்
ஓம் கபிலாய நம: பழுப்பு நிறம் உடையவன்
ஓம் கஜகர்ணிகாய நம: யானையின் காதுகளை உடையவன்
ஓம் லம்போதராய நம: பெரிய வயிறு உடையவன்
ஓம் விகடாய நம: அழகிய வடிவம் உடையவன்
ஓம் விக்னராஜாய நம: தடைகளை நீக்குபவன்
ஓம் விநாயகாய நம: தனக்கு மேல் நாயகன் இல்லாதவன்
ஓம் தூமகேதவே நம: புகை வண்ண மேனியன்
ஓம் கணாத்யக்ஷாய நம: பூத கணங்களின் தலைவன்
ஓம் பாலசந்திராய நம: குழந்தை சந்திரன் போல் ஒளிர்பவன்
ஓம் கஜாநநாய நம: யானை முகம் உடையவன்
ஓம் வக்ரதுண்டாய நம: வளைந்த தும்பிக்கை உடையவன்
ஓம் சூர்ப்பகர்ணாய நம: முறம் போன்ற காதுகள் உடையவன்
ஓம் ஹேரம்பாய நம: ஐந்து முகம் கொண்டவன்
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: முருகனுக்கு முன் பிறந்தவன்
நீங்கள் ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் பொழுது நினைத்த காரியம் எந்த ஒரு தடைகளும் இல்லாமல் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |