குபேரன் அருள் இருப்பவர்களுக்கு வாழ்வில் வறுமை நீங்கி யோகமும் அதிர்ஷ்டமும் பெருகும் என்பது நம்பிக்கை. குபேரன் சில ராசிகளுக்கு அதிக முக்கியத்துவத்தையும், ஆசீர்வாதத்தையும் வழங்குவதாக நம்பப்படுகிறது. அதன்படி குபேரன் ஆசிபெற்ற ராசிகள் குறித்து பார்ப்போம்.

ரிஷபம்
கடின உழைப்பாளிகள், விடாமுயற்சிக் கொண்டவர்கள், ஆடம்பரத்தை விரும்புபவர்கள். இவர்களது பொறுமையும், நிதானமான அணுகுமுறையும் குபேரனுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் இவர்களுக்கு சொத்து சேர்க்கையும், திடீர் பணவரவும் உண்டாகும்.
கடகம்
நேர்மையான உழைப்பும், சேமிக்கும் பழக்கமும் இவர்களுக்கு குபேரனின் அருளை பெற்றுத் தருகிறது. இவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
துலாம்
பணத்தை எப்படி பெருக்குவது என்பதில் அவர்களுக்கு இயற்கையிலேயே ஞானம் இருக்கும். ஆடம்பரம் மற்றும் நேர்த்தியை விரும்பும் இவர்களுக்கு குபேரன் செல்வத்தை வாரி வழங்குகிறார். இவர்களது சாதுரியமான பேச்சு, நிர்வாகத் திறன் இவர்களை தொழிலதிபர்களாக மாற்றுகிறது.
தனுசு
ஆன்மீகத்திலும், தர்ம சிந்தனையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். எனவே குபேரனின் அருள் எப்போதும் இவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கும். இவர்களது நேர்மறை எண்ணங்கள் செல்வத்தை இவர்கள் பக்கம் ஈர்க்கும்.
நேர்மையான உழைப்பும், சிக்கனமும், பிறருக்கு உதவும் குணமும் இருந்தால் அவர்களிடம் குபேரன் நிரந்தரமாக தங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.