11ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைகளா நீங்கள்?இந்த பதிவு உங்களுக்கு தான்
மனிதன் பிறப்போடு அதிக தொடர்பு கொண்டது எண்கள் .நாம் பிறந்த தேதி தொடங்கி பிறந்த நேரம் வரை எண்களோடு தொடர்புடையது.அப்படியாக நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் எண் கணிதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது.
இந்த எண் கணிதம் கொண்டு ஒருவருடைய நிகழ் காலம் எதிர்காலம் பற்றி கணிக்க முடியும். அப்படியாக பிறந்த அனைவரும் அவர்கள் வீட்டிற்கு ஒவ்வொரு விதமான அதிர்ஷ்டத்தை கொடுப்பவர்களாக இருந்தாலும்,பெண்கள் குறிப்பிட்ட இந்த தேதியில் பிறந்தால் அவர்கள் தந்தைக்கு அதிர்ஷ்டம் கொடுப்பவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரமான எண் கணிதம் சொல்கிறது அதை பற்றி பார்ப்போம்.
அதாவது ஒருவர் எந்த மாதத்தில் பிறந்திருந்தாலும் அவர் பிறந்த தேதி ஒன்றாக இருந்தால் அவரது மூல எண் 1 ஆகும். அதைப்போல, ஒருவர் எந்த்வொரு மாதத்திலும் 11 ஆம் தேதி பிறந்திருந்தால் அவரது மூல எண் 2. ஏனெனில் 1 + 1 இன் கூட்டுத்தொகை 2 ஆகும்.
அந்த வகையில் மூல எண் 2 கொண்ட பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளா பார்க்க படுகிறது.2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 2 ஆகும். 2-ஐ மூல எண்ணாக கொண்ட பெண்கள் தந்தைக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கிறார்கள்.
இவர்கள் மிகவும் புத்திசாலியாக கருதப்படுகிறார்கள்.அவர்கள் தங்கள் திறமையால் மகத்தான வெற்றியை அடைவார்கள்.அவர்கள் நிதி ரீதியாகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு ஒருபோதும் நிதிப் பிரச்சனை ஏற்படுவதில்லை என்றும் சொல்ல படுகிறது.
மேலும் எண் 2-ஐ கொண்ட பெண்களை லட்சுமி தேவி விரும்புகிறார்.மேலும் இந்த பெண்கள் பிறந்த பிறகு தந்தை வாழ்வில் பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள் என்று எண் கணிதத்தில் பார்க்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |