27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் மலர் என தெரியுமா ?
ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிட்ட சில மலர் மற்றும் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாக கருதப்படுகிறது.
அந்த நிறத்தை அவர்கள் வாழ்க்கையில் பயன்படுத்தப்படுதும் பொழுதும் மலர்களை கொண்டு அவர்கள் இறைவனுக்கு பூஜை செய்யும் பொழுது அவர்கள் கேட்ட காரியம் விரைவில் கிடைக்கும் நம்பிக்கை. அப்படியாக, 27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட மலர் மற்றும் நிறம் என்னவென்று பார்ப்போம்.

1. அசுவினி நட்சத்திரம்: சாமந்தி, இளஞ்சிவப்பு
2. பரணி நட்சத்திரம்: முல்லை, இளஞ்சிவப்பு
3. கார்த்திகை நட்சத்திரம்: செவ்வரளி ,இளஞ்சிவப்பு
4. ரோகிணி: பாரிஜாதம், வெண்மை
5. மிருகசீரிடம் நட்சத்திரம் : ஜாதிமல்லி, வெண்மை
6.திருவாதிரை நட்சத்திரம்: வில்வப் பூ, பச்சை
7. புனர்பூசம் நட்சத்திரம்: மரிக்கொழுந்து பச்சை, கிளிப்பச்சை
8. பூசம் நட்சத்திரம் : பன்னீர் மலர், வெண்மை
9.ஆயில்யம் நட்சத்திரம் : செவ்வரளி, வெண்மை கலந்தது
10. மகம் நட்சத்திரம் : மல்லிகை, இளஞ்சிவப்பு
11.பூரம் நட்சத்திரம் : தாமரை, இளஞ்சிவப்பு
12.உத்திரம் நட்சத்திரம் : கதம்பம், வெளிர்பச்சை
13.அஸ்தம் நட்சத்திரம் : வெண் தாமரை, பச்சை நிறம்
14. சித்திரை நட்சத்திரம்: மந்தாரை, பச்சை நிறம்
15. சுவாதி நட்சத்திரம் :மஞ்சள் அரளி, வெண்மை
16.விசாகம் நட்சத்திரம் : இருவாட்சி, வெளிர்மஞ்சள்
17.அனுஷம் நட்சத்திரம் : செம்முல்லை, இளஞ்சிவப்பு
18. கேட்டை நட்சத்திரம் :பன்னீர் ரோஜா, நீலம்
19.மூலம் நட்சத்திரம் ;வெண்சங்கு மலர், மஞ்சள்நிறம்
20. பூராடம் நட்சத்திரம் : விருட்சி, மஞ்சள் நிறம்
21.உத்திராடம் நட்சத்திரம் : சம்பங்கி, வெளிர் மஞ்சள்
22. திருவோணம் நட்சத்திரம் : செந்நிற ரோஜா, கருநீலம்
23.அவிட்டம் நட்சத்திரம் : செண்பகம், கருநீலம்
24.சதயம் நட்சத்திரம் : நீலோற்பலம், மஞ்சள்
25. பூரட்டாதி நட்சத்திரம் : வெள்ளரளி, கருநீலம்
26.உத்திரட்டாதி நட்சத்திரம் : நந்தியாவட்டம், மஞ்சள்
27. ரேவதி நட்சத்திரம் : செம்பருத்தி வெளிர் மஞ்சள்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |