2026: 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடிய நிறம் என்ன தெரியுமா?
ஒவ்வொரு வருடம் பிறக்கும்பொழுதும் நாம் எல்லோரும் மிகுந்த நம்பிக்கையோடு நகர்ந்து செல்வோம். அப்படியாக 2026 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக பிறந்திருக்கின்ற நிலையில் இந்த ஆண்டு கிரகங்கள் பல்வேறு விதமான மாற்றங்களை நிகழ்த்த உள்ளார்கள்.
அந்த வகையில் கிரகங்களின் மாற்றம் நன்மை தீமை செய்யக்கூடியதாக இருந்தாலும் நாம் நம்மை சரியாக வைத்துக் கொள்ளுகின்ற நேரத்தில் எல்லாம் நமக்கு சாதகமாகவே அமையும். அப்படியாக, 2026 ஆம் ஆண்டு 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடிய நிறம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு தலைமைத்துவ பண்பு என்பது இயல்பாகவே மிகவும் சிறப்பாக வரக்கூடியது. இன்னும் அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்க 2026 ஆம் ஆண்டு கருஞ்சிவப்பு, பவள நிறம், தங்க நிறம் போன்றவற்றை அவர்கள் அணியும் பொழுது இன்னும் சிறப்பாக அவர்கள் செயல்படக்கூடிய தன்மையை கொடுக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் இந்த ஆண்டு உணர்வு ரீதியாக ஒரு சம நிலையில் செயல்படுவதற்கு அவர்கள் மரகத பச்சை, இளஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உடை அணியும் பொழுது கிரகங்கள் உடைய பாதிப்புகளில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினர் அவர்களுடைய மனக்குழப்பங்கள் விலகவும் பேச்சில் தெளிவு உண்டாகவும் புதினா பச்சை, எலுமிச்சை மஞ்சள், நீல நிறங்களில் உடை அணியும் பொழுது ஒரு நல்ல மாற்றத்தை மனநிலையில் அவர்கள் உணரலாம்.
கடகம்:
கடக ராசியினர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் மன குழப்பங்கள் விலகவும் வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களில் ஆடை உடுத்தும் பொழுது ஒரு நல்ல மாற்றத்தை பெறுவார்கள்.
சிம்மம்:
நீண்ட நாட்களாகவே மிகவும் துன்பத்தை சந்தித்துக் கொண்டு சிம்ம ராசியினர் இந்த ஆண்டு நினைத்ததை சாதிக்க தயாராகிக் கொண்டிருப்பவர்கள். ஆதலால் அவர்கள் இந்த வருடம் தங்கம் மற்றும் மெரூன், ஆரஞ்சு நிறங்களில் உடை அணியும் பொழுது நிச்சயம் அவர்களுக்கு ஒரு நல்ல திருப்பத்தை கொடுக்கும்.
கன்னி:
கன்னி ராசியினர் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி பெறவும் பிரச்சனைகளை சமாளித்து தைரியமாக முன் செல்லவும் ஆலிவ் பச்சை, பழுப்பு மற்றும் மென்மையான பழுப்பு நிறங்களில் அவர்கள் உடை அணிந்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியினர் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருக்கின்ற பிரச்சனைகள் விலக சிவப்பு, ஊதா மற்றும் நீல நிறங்களில் உடை அணியும் பொழுது நல்ல மாற்றத்தை பெறுவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இந்த ஆண்டு எந்த ஒரு பிரச்சனையும் அவர்களுக்கு நேராமல் இருப்பதற்கு வைன் நிறம் அல்லது சாம்பல் நிறங்களில் உடை அணியும் பொழுது பாதுகாப்பாக இருக்கும்.
தனுசு:
இவர்கள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைய அடர் நீலம், அடர் பச்சை குங்குமப்பூ ஆகிய நிறங்களில் ஆடை அணியும்பொழுது குழப்பங்கள் யாவும் விலகும்.
மகரம்:
இவர்கள் இந்த ஆண்டு நீல நிறம், வனப்பச்சை, சாம்பல் நிறங்களில் ஆடை அணியும் பொழுது சந்திக்கின்ற தடைகள் யாவும் விலகும்.
கும்பம்:
இவர்கள் இந்த ஆண்டு வெள்ளி நிறம், பச்சை அல்லது பச்சை கலந்தநீல நிறங்களில் உடை அணியும் பொழுது சிந்தனை மற்றும் செயல் சிறப்பாக அமையும்.
மீனம்:
இவர்கள் இந்த ஆண்டு மன அமைதியும், மன நிம்மதியும் பெற கடல் பச்சை, ஊதா நிறம் அல்லது வெள்ளை நிறங்களில் ஆடை அணிந்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |