புத்தாண்டில் உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் எது?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட நிறம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
ஒவ்வொருவரும் தங்களின் ராசிக்கு ஏற்ற நிறங்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது பல நன்மைகளை அவர்கள் பெற வாய்ப்புள்ளது.
அந்தவகையில், 2025ஆம் ஆண்டில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எந்த நிறம் அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது என்று பார்ப்போம்.
மேஷம்
2025 ஆம் ஆண்டில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கப்போகிறது. இதனால் இவர்களின் உற்சாகத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும். இந்த நிறங்களை அதிகம் பயன்படுத்தினால் அதிர்ஷ்டமும், நன்மைகளும் கிடைக்கும்.
ரிஷபம்
2025ஆம் ஆண்டில், அமைதியான பச்சை, இளஞ்சிவப்பு, பழுப்பு நிறங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த நிறங்களை அதிகம் பயன்படுத்தும் போது உங்கள் செயல்பாடுகளை நிலையானதாக வைத்திருக்க உதவும்.
மிதுனம்
2025ஆம் ஆண்டில், வெளிர் நீலம், மஞ்சள் மற்றும் வெள்ளி நிறங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். இதனால் உரையாடல் மற்றும் தெளிவான சிந்தனையை ஊக்குவிக்கின்றன.
கடகம்
இந்த ராசியினர் சந்திரனின் செல்வாக்கு காரணமாக உணர்ச்சிகள், உந்துதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்கள் வெள்ளி நிற ஆடை அணிவது அவர்களின் முயற்சிக்கு வெற்றியை பரிசாக்கும்.
சிம்மம்
2025 ஆம் ஆண்டில் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் தங்க நிறம் இருக்கும். இந்த வண்ணங்களை பயன்படுத்தும் போது உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
கன்னி
2025ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு அடர் பச்சை நிறம் அதிர்ஷ்டமான நிறமாக இருக்கும். ஊதா நிறம் இவர்களை நிலையானதாகவும், வளப்படுத்துவதாகவும், முடிவெடுப்பதில் ஆதரவாகவும் இருக்க உதவுகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |