12 ராசிக்கு உரிய அதிர்ஷ்ட திசைகள் எது தெரியுமா?

By Sakthi Raj May 01, 2025 01:30 PM GMT
Report

ஜோதிடத்தில் 12 ராசிகளும் தனி தன்மை கொண்டது. அதே போல் வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் 12 ராசிகளுக்குரிய அதிர்ஷ்ட திசைகள் எது என்று பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டமான திசையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு வடக்கு திசை சாதகமற்ற திசை ஆகும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு திசை நன்மையை செய்யும். ஆனால் தெற்கு திசை இவர்களுக்கு அவ்வளவு சிறப்பான திசை அல்ல.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு திசை எல்லா விதமான அதிர்ஷ்டத்தையும் தேடி கொடுக்கும். ஆனால் தெற்கு நன்மையை செய்யாது.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வட மேற்கு, தெற்கு இந்த இரண்டு திசைகளும் மிக சிறந்த பலன் அளிக்கும். ஆனால் வடக்கு திசை அவ்வளவு சிறப்பானது அல்ல.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு திசை வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையை வழங்கும். ஆனால் வட மேற்கு திசை சாதகமாக இல்லை.

வீட்டு வாசலில் நிற்கும் புதன்- கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெரும் ராசிகள்

வீட்டு வாசலில் நிற்கும் புதன்- கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெரும் ராசிகள்

 

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு திசை நன்மையை செய்யும். ஆனால் தெற்கு திசை நன்மையை செய்யாது.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு திசை மன நிம்மதியை வழங்கும். ஆனால் வட கிழக்கு திசை அவர்களுக்கு எதிர்மறை விளைவுகளை கொடுத்துவிடும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வட கிழக்கு, வட மேற்கு என இந்த இரண்டு திசைகளும் சிறப்பான திசை ஆகும். ஆனால் வடக்கு நன்மை செய்யாது.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு வட கிழக்கு, கிழக்கு திசை சிறப்பானதாக அமையும். ஆனால் தென்கிழக்கு திசை அவ்வளவு சிறப்பானது ஆல்ல.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு தென் கிழக்கு, மேற்கு திசை வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும். ஆனால் கிழக்கு திசை நன்மை செய்யாது.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு தென்கிழக்கு திசை மிக சிறந்த பலன் கொடுக்கும். ஆனால் வட மேற்கு திசை இவர்களுக்கு சில சிக்கல்களை கொடுத்துவிடும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வட மேற்கு,தெற்கு நன்மையை நினைத்ததை சாதிக்கும் திசை ஆகும். ஆனால் தென்கிழக்கு திசை சிறப்பான திசை அல்ல.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US