வீட்டு வாசலில் நிற்கும் புதன்- கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெரும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் 9 கிரகங்களும் அவர்களுடைய இடத்தை ஒரு கால இடைவேளையில் மாற்றி கொண்டு இருப்பார்கள். அந்த மாற்றம் 12 ராசிகளுக்கும் ஒரு மிக மாற்றத்தை வழங்கும்.
அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் ஒருவருடைய பேச்சு படிப்பு, கல்வி தொடர்பான விஷயங்களுக்கு காரணியாக விளங்கக்கூடியவர்.
புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக இருக்கிறார். அப்படியாக, தற்பொழுது புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்கிறார். அவர் இந்த மே மாதம் ஏழாம் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார்.
புதன் பகவானின் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் ஒரு விதமான தாக்கம் உண்டு செய்யும். ஆனால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு இந்த மாற்றம் மிக பெரிய வாய்ப்பாக அமைய போகிறது. அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.
மேஷம்:
புதன் பகவான் மேஷ ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் இந்த கால கட்டம் இவர்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உயர் கல்வி படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான காலம் ஆகும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
சிம்மம்:
புதன் பகவான் சிம்ம ராசியில் ஐந்தாம் வீட்டில் பயணம் செல்ல உள்ளார். இதனால் இவர்கள் வாழ்க்கையில் தொடர் அதிர்ஷ்டங்களை சந்திக்கக்கூடும்.செய்யும் வேலை அனைத்திலும் வெற்றிகள் வந்து சேரும். நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் நல்ல முடிவை பெரும்.
துலாம்:
புதன் பகவான் துலாம் ராசியில் ஏழாம் வீட்டில் பயணம் செய்யவுள்ளார். அதனால் இவர்களுக்கு படிப்பதற்கு பொற்காலம். எதையும் தீர ஆலோசித்து ,முடிவு எடுப்பார்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கிடைக்கும். கடன் வாங்கியவர்கள் கடனை அடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |