கோயிலுக்கு செல்லும் பொழுது 27 நட்சத்திரக்காரர்களும் எடுத்து செல்ல வேண்டிய அதிர்ஷ்ட மலர்கள்
ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களும் உரிய அதிர்ஷ்ட மலர்கள் இருக்கிறது. அதை கொண்டு அவர்கள் அர்ச்சனை செய்யும் பொழுது அவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகிறது. அப்படியாக 27 நட்சத்திரங்களும் கோயிலுக்கு செல்லும் பொழுது அர்ச்சனை செய்ய எடுத்து செல்ல வேண்டிய மலர்கள் பற்றி பார்ப்போம்.
அஸ்வினி - சாமந்தி
பரணி - முல்லை
கார்த்திகை - செவ்வரளி
ரோகிணி - பாரிஜாதம், பவளமல்லி,
மிருகசீரிடம் - ஜாதி மல்லி
திருவாதிரை - வில்வப் பூ, வில்வம்
புனர்பூசம் - மரிக்கொழுந்து
பூசம் - பன்னீர் மலர்
ஆயில்யம் - செவ்வரளி
மகம் - மல்லிகை
பூரம் - தாமரை
உத்திரம் - கதம்பம்
அஸ்தம் - வெண்தாமரை
சித்திரை - மந்தாரை
சுவாதி - மஞ்சள் அரளி
விசாகம் - இருவாட்சி
அனுஷம் - செம்முல்லை (செந்நிற மலர்கள்)
கேட்டை - பன்னீர் ரோஜா
மூலம் - வெண்சங்கு மலர்
பூராடம் - விருட்சி (இட்லிப்பூ)
உத்திராடம் - சம்பங்கி
திருவோணம் - ரோஜா
அவிட்டம் - செண்பகம்
சதயம் - நீலோற்பவம்
பூரட்டாதி - வெள்ளரளி
உத்திரட்டாதி - நந்தியாவட்டம்
ரேவதி - செம்பருத்தி
இந்த மலர்கள் கொண்டு சுவாமியை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய பாவங்கள் விலகி மன நிம்மதி கிடைக்கிறது
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







