எந்த லக்னக்காரர்கள் எந்த நவரத்தின கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?
ஜாதகத்தில் லக்னம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, லக்னம் ரீதியாக யார் எந்த நவரத்தின கற்களை அணிந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் சிவப்பு பவளம், மாணிக்கம் மற்றும் மஞ்சள் சபையர் ரத்தினக் கற்களை அணியலாம்.
ரிஷபம்:
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் வைரம் அல்லது நீலக்கல் மரகதம் நீல சபையர் ரத்தின கற்களை அணியலாம்.
மிதுனம்:
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் மரகதம் மற்றும் வைரம் அணிவது நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
கடகம்:
கடக லக்னத்தில் பிறந்தவர்கள் இயற்கை முத்து, சிவப்பு பவளம், மஞ்சள் நீலக்கல் ரத்தினக் கற்களை அணியலாம்.
சிம்மம்:
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் மாணிக்கம், மஞ்சள் நீலக்கல் மற்றும் சிவப்பு பவள ரத்தினக் கற்களை அணியலாம்.
கன்னி:
கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் மரகதம், நீல சபையர், வைரம் போன்றவற்றை அணியலாம்.
துலாம்:
துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் வைரம் அல்லது நீலக்கல், நீல சபையர் மற்றும் மரகத ரத்தினக் கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
விருச்சிகம்:
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் சிவப்பு பவளம், மஞ்சள் நீலக்கல் மற்றும் இயற்கை முத்து ரத்தினங்களை அணியலாம்.
தனுசு:
தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் மஞ்சள் கல், சிவப்பு பவளம், மற்றும் ரூபி ரத்தினக் கற்களை அணியலாம்.
மகரம்:
மகர லக்னத்தில் பிறந்தவர்கள் நீலக்கல், வைரம் மற்றும் மரகத ரத்தினக் கற்களை அணியலாம். கும்பம்: கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் நீலக்கல் மரகதம் அல்லது வைரம் அணியலாம்.
மீனம்:
மீன லக்னத்தில் பிறந்தவர்கள் மஞ்சள் கல், இயற்கை முத்து, சிவப்பு பவள ரத்தினக் கற்களை அணியலாம்.
நவரத்தின மோதிரங்களை அணியும் முறை:
ஆணாக இருந்தால் வலது கைகளிலும், பெண்ணாக இருந்தால் இடது கைகளிலும் நவரத்தின மோதிரங்களை அணியவேண்டும். இவ்வாறு லக்னத்தின் அடைப்படையில் நாம் சரியான நவரத்தினைக் கற்களை தேர்ந்தெடுத்து அணியும் பொழுது நம் வாழ்க்கையிலும் தொழிலும் நல்ல வளர்ச்சி உண்டாகி அடுத்த அடுத்த வெற்றிகள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |