உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ராசிப்படி என்ன பரிசு கொடுத்தால் உறவு நீடிக்கும் தெரியுமா?

By Sakthi Raj May 23, 2026 06:57 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பொருட்களும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் நமக்கு பிடித்தவர்களுக்கு ஏதேனும் பரிசு பொருட்களை வழங்க வேண்டும் என்று ஆசை கொள்ளும் பொழுது அவர்களின் ராசிக்கு ஏற்ப பரிசு பொருட்களை அவர்களுக்கு வாங்கி கொடுத்தால் நிச்சயம் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.

அப்படியாக, ராசிப்படி நமக்கு பிடித்தவர்களுக்கு என்ன பொருட்களை பரிசாக கொடுத்தால் நம்முடைய உறவு நீட்டிக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ராசிப்படி என்ன பரிசு கொடுத்தால் உறவு நீடிக்கும் தெரியுமா? | Lucky Gifts According To 12 Zodiac Sign

உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ராசிப்படி என்ன பரிசு கொடுத்தால் உறவு நீடிக்கும் தெரியுமா? | Lucky Gifts According To 12 Zodiac Sign

மேஷம்:

மேஷ ராசியினருக்கு உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் கவனம் செலுத்துவார்கள். ஆதலால் அவர்களுக்கு உடற்பயிற்சி தொடர்பான பொருட்களை பரிசாக வழங்கலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசியை ஆளக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். ஆதலால், இவர்களுக்கு அழகு தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் இருக்கும். எனவே வாசனை திரவியங்கள், அழகு சாதனை பொருட்களை இவர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.

மிதுனம்:

புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மிதுன ராசியினர் படைப்பாற்றல் மற்றும் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள். ஆகவே இவர்களுக்கு படிப்பு தொடர்பான விஷயங்களை பரிசாக கொடுக்கலாம்.

கடகம்:

கடக ராசியினர் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள். இவர்களுக்கு கலை சார்ந்த பொருட்களை நாம் பரிசாக வழங்கலாம். அதிலும், வீட்டு அலங்கார பொருட்களை பரிசாக கொடுத்தால் இவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு தாங்கள் எப்பவும் தோரணையாக வெளியே காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆக, இவர்களுக்கு அவர்களுடைய ஆளுமையை கூட்டக்கூடிய பொருட்களை பரிசாக வழங்கலாம்.

கன்னி:

கன்னி ராசியினர் மிகவும் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள். ஆக இவர்களுக்கு பேனா, கல்வி தொடர்பான பொருட்களை பரிசாக வழங்கலாம்.

உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ராசிப்படி என்ன பரிசு கொடுத்தால் உறவு நீடிக்கும் தெரியுமா? | Lucky Gifts According To 12 Zodiac Sign 

ஒருவருக்கு குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள்

ஒருவருக்கு குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள்

துலாம்:

துலாம் ராசியினர் மிகுந்த ரசனை உள்ளம் கொண்டவர்கள். ஆகையால் இவர்களுக்கு சுவர் ஓவியம், வீட்டு அலங்கார பொருட்கள், கைவினை பொருட்களை இவர்களுக்கு பரிசாக வழங்கும் பொழுது இவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினருக்கு எப்பொழுதும் கம்பீரமாக தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று ஆசை கொள்வார்கள். ஆகையால் இவர்களுக்கு சன் கிளாஸ் போன்ற பொருட்களை பரிசாக வழங்கலாம்.

தனுசு:

தனுசு ராசியினர் பயணங்களை அதிகம் விரும்பக் கூடியவர்கள். ஆக, இவர்களுக்கு பயணத்திற்கு தேவையான பொருட்கள் ட்ராவல் பேக், ட்ரக்கிங் ஷூ போன்றவற்றை பரிசாக அளிக்கலாம்.

மகரம்:

இவர்களுக்கு சேமிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். ஆக, இவர்களுக்கு பொருளாதாரத்தை சேமித்து வைக்கக்கூடிய பொருட்களை பரிசாக வழங்கலாம், உதாரணமாக பணப்பை போன்றவை பரிசாக கொடுத்தால் இவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

கும்பம:

கும்பராசியில் பிறந்தவர்கள் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் உடையவர்கள். ஆகையால் இவர்களுக்கு மொபைல் போன் லேப்டாப் போன்ற பொருட்களை பரிசாக வழங்கினால் மகிழ்ச்சி அடைவார்கள்.

மீனம்:

இவர்களுக்கு இசை ஓவியம், கலை சார்ந்த விஷயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால் இவர்கள் இசையுடன் தொடர்புடைய பொருட்களை பரிசாக வழங்கும் பொழுது இவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US