அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும் 7 குதிரையின் ஓவியம்.. எந்த திசையில் வைக்க வேண்டும்
வாஸ்து என்பது நம்முடைய வீடுகளில் அமைந்திருக்கக் கூடிய திசை மட்டுமல்ல நம் வைத்திருக்கின்ற பொருட்களும் வாஸ்துவை குறிக்கிறது. ஒரு சிலர் வீடுகளில் வாஸ்து சரி இல்லாமல் இருக்கின்ற நேரத்தில் ஒரு சில பொருட்களை வாங்கி வைக்கும் பொழுது அவை வாஸ்து பிரச்சனையை குறைத்து நல்ல பலன்களை கொடுக்கிறது.
அந்த வகையில், வீடுகளில் 7 ஓடும் குதிரைகளின் படத்தை வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அப்படியாக, வீடுகளில் எந்த திசையில் ஏழு குதிரைகளின் படம் வைத்தால் நமக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்று பார்ப்போம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி குதிரை என்பது ஒரு ஆற்றலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே, ஒரு குதிரை ஓடும் பொழுது அதனுடைய இலக்கை அடைந்த பின்னரே ஓய்வெடுக்கிறது.
இந்து மதத்தில் ஏழு நிறங்கள், ஏழு இசைக் குறிப்புகள் மற்றும் ஏழு வாக்குறுதிகளை போலவே ஏழு என்ற எண் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மத நூல்களிலும் சூரிய பகவான் சவாரி செய்யக்கூடிய அந்த தேர் ஏழு குதிரைகளை கொண்டது.
எனவே ஏழு குதிரைகளின் படம் மிகவும் மங்களகரமானதாகவும் அதிர்ஷ்டம் பெறக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி ஏழு குதிரைகளின் படத்தை நாம் வெவ்வேறு திசைகளில் வைக்கும் பொழுது நமக்கு வெவ்வேறு பலன்கள் கிடைக்கிறது.
அப்படியாக, தொழிலில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் கிழக்கு திசையில் ஏழு குதிரைகள் படம் வைக்கலாம். வியாபாரத்தில் வெற்றியும் புகழும் கிடைக்க வேண்டும் என்றால் தெற்கு திசையில் வைப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் மற்றும் எல்லா விதமான மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்க வடக்கு திசையில் வைப்பது நல்ல பலன்களை கொடுக்கும். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் படி 7 குதிரையின் படத்தை நாம் படுக்கையறையில் மட்டும் வைக்கக்கூடாது. அது கணவன் மனைவி இடையே தேவையில்லாத வாக்குவாதம் தகராறுகளை கொண்டு வரும்.
அதைப்போல் குளியலறை மற்றும் வீட்டு பூஜை அறை படிக்கும் அறையிலும் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
படத்தில் ஏழு குதிரைகள் ஓடுவது போல் இருக்க வேண்டும். குதிரைகள் வெள்ளையாக இருப்பது நமக்கு மகளகரமானதாகவும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். படத்தில் உள்ள குதிரைகள் நம்மை அச்சப்படுத்துவதாக இல்லாமல் சுறுசுறுப்பாக காட்சியை கொடுக்க வேண்டும். குதிரைகளின் வாயில் கடிவாளங்கள் இருக்கக் கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |