12 ராசிகளுக்குமான அதிர்ஷ்ட தெய்வம் யார்? வழிபாடு செய்ய தவறாதீர்கள்..
12 ராசிகளுக்கும் ஒவ்வொரு உபாசன தெய்வங்கள் இருக்கிறார்கள். அவர்களை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இவர்களை இந்த ராசிக்காரர்கள் சரணடைந்து வழிபாடு செய்யும்பொழுது நல்ல மாற்றம்உருவாகும்.
மேஷம்:
இவர்களுடைய உபாசன தெய்வமாக முருகப்பெருமான் இருக்கிறார். அவரை வழிபாடு செய்யும் பொழுது துணிவு, செய்யும் காரியங்களில் வெற்றிகளை ஜெயிக்க கூடிய வல்லமை பிறக்கும்.
ரிஷபம்:
இவர்களின் உபாசன தெய்வமாக மகாலட்சுமி தேவி இருக்கிறார். அவர்களை வழிபாடு செய்யும்பொழுது செல்வ வளம், குடும்பத்தில் அமைதி கிடைக்கும்.
மிதுனம்:
இவர்களுடைய உபாசன தெய்வமாக விஷ்ணு பகவான், கிருஷ்ண பகவான் இருக்கிறார்கள். அதனால் அவரை சரணடையும் போது அறிவு, நல்ல தொடர்பு திறன் பிறக்கிறது.
கடகம்:
இவர்களுடைய உபாசன தெய்வமாக பார்வதி தேவி, அம்மன் இருக்கிறார்கள். இவர்களை அடைந்து வழிபாடு செய்யும்பொழுது மன அமைதி அன்பு அதிகரிக்கும்.
சிம்மம்:
இவர்களுடைய உபாசன தெய்வமாக சூரிய பகவான், சிவபெருமான் இருக்கிறார். இவர்களை வழிபாடு செய்யும்பொழுது பெயர், புகழ், அதிகாரம் தலைமைத்துவ பண்பு அதிகரிக்கும்.
கன்னி:
இவர்களின் உபாசன தெய்வமாக ஹயக்ரீவர் இருக்கிறார். அவரை வழிபாடு செய்யும்பொழுது கல்வியில் சிறந்து விளங்கவும், ஞானம் பெறவும் உதவுகிறது.
துலாம்:
லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி இவர்களை வழிபாடு செய்யும்பொழுது சமநிலை, கலையில் வளர்ச்சி செல்வ செழிப்பு உண்டாகும்.
விருச்சிகம்:
இவர்களின் உபாசன தெய்வமாக காளி மற்றும் முருகப்பெருமான் இருக்கிறார்கள். அவர்களை வழிபாடு செய்யும்பொழுது தைரியம் மறைமுகமான சக்தி பாதுகாப்பு உருவாகும்.
தனுசு:
இவர்களின் உபாசன தெய்வமாக தட்சிணாமூர்த்தி, விஷ்ணு பகவான் இருக்கிறார். அவர்களை வழிபாடு செய்யும்போது ஆன்மீகத்தில் நல்ல வளர்ச்சி, ஞானம் பெருகும்.
மகரம்:
இவர்களின் உபாசன தெய்வமாக சனிபகவான், அனுமன், சிவபெருமான் இருக்கிறார்கள். அவர்களை சரணடைந்து வழிபாடு செய்யும்பொழுது பொறுமை உழைப்பு எதிலும் வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
இவர்களின் உபாசன தெய்வம் சனிபகவான், காளிதேவி இருக்கிறார்கள். அவரை சரணடைந்து வழிபாடு செய்யும் பொழுது புதுமையான சிந்தனை பிறக்கும்.
மீனம்:
இவர்களின் உபாசன தெய்வமாக விஷ்ணு பகவான், குரு பகவான் இருக்கிறார். அவர்களை வழிபாடு செய்யும்பொழுது கருணை, ஆன்மீகம் மனதில் அமைதி உண்டாகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |