இந்த 3 பறவைகள் உங்கள் வீட்டிற்கு வருகிறதா? அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்
இந்து மத சாஸ்திரத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்து பார்த்து விஷயங்கள் செய்ய நிச்சயம் அதில் வெற்றிகள் கிடைக்கும்.
மேலும், வாஸ்து சரியாக இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல் தங்குவதில்லை. அப்படியாக, வாஸ்து சாஸ்திரத்தில் சில பறவைகள் வீட்டிற்கு வர அது மிக பெரிய அதிர்ஷ்டமாக சொல்லப்படுகிறது. அவை எந்த பறவைகள் என்று பார்ப்போம்.
ஆந்தை
பொதுவாக ஆந்தை மிகவும் அசுப பறவையாக பார்க்கப்பட்டாலும் வாஸ்து சாஸ்திரத்தின் ஆந்தை வீட்டிற்கு வருவது மங்களகரமாக கருதப்படுகிறது. காரணம், வாஸ்து சாஸ்திரத்தில் ஆந்தை செல்வம் மற்றும் செழிப்பின் காரணியாக நம்பப்படுகிறது. ஆக, எந்த வீட்டிற்கு ஆந்தை வருகிறதோ அந்த வீட்டில் அதிர்ஷ்டம் வீட்டு வாசற் கதவை தட்ட போகிறது என்று அர்த்தம்.
காகம்
காகம் வீட்டில் கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது. மேலும், காகம் நம்முடைய மூதாதையர்களுடன் தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. ஆதலால் காகம் வீட்டிற்கு வருவது நன்மையாக கருதப்படுகிறது.
கிளி
கிளி அம்பாள் கைகளில் இருக்கும் முக்கிய அங்கமாகவும். ஆக இந்து மதத்தில் கிளி மங்களகரமான பறவையாக நம்பப்படுகிறது. ஆக ஒருவர் வீட்டிற்கு கிளி வந்தால் மஹாலக்ஷ்மியின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்க போகிறது என்று அர்த்தம்.அதே போல், கிளி குபேரனுடன் தொடர்புடையது என்பதால், வீட்டிற்கு கிளி வந்தால் பொருளாதார நிலை மேம்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |