கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

By Sakthi Raj Feb 28, 2026 05:53 AM GMT
Report

வீடுகளில் நாம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். காரணம் நம்மை சுற்றி ததாஸ்து தேவர்கள் இருப்பார்களாம். அவர்கள் நாம் சொல்ல கூடிய வார்த்தைகளை "அப்படியே ஆகட்டும்" என்று நமக்கு அருள் புரிபவர்கள் என்ற காரணத்தினால் தான் நம் பேசக்கூடிய வார்த்தைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சில சமயங்களில் நாம் சொல்லிய வார்த்தை அப்படியே எதிர்காலங்களில் நடக்கக்கூடியதை நாம் பார்க்க முடியும். வார்த்தைகளுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. அதாவது நன்மை, தீமை, சாபம் என்று எதுவாக இருந்தாலும் நம் வார்த்தைகளில் கவனமாக இல்லை என்றால் பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலை வந்து விடும்.

அப்படியாக, ததாஸ்து தேவர்கள் நமக்கு தீயதை மட்டும் கொடுப்பவர்கள் அல்ல. நாம் வேண்டிய வரத்தையும் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் நல்லதையே நினைத்து, கேட்ட வரத்தை பெற ததாஸ்து தேவர்களின் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால் நிச்சயம் நாம் நினைத்தகாரியம் நடக்கும்.

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா? | Tathastu Devas Mantras To Get Our Wish Fulfilled

இந்த 4 ராசிகளுக்கு எப்பொழுதும் சனிபகவான் அதிர்ஷ்டத்தை கொடுப்பாராம்

இந்த 4 ராசிகளுக்கு எப்பொழுதும் சனிபகவான் அதிர்ஷ்டத்தை கொடுப்பாராம்

மந்திரம்:

"ஓம் ஸ்ரீ அஸ்வினி நமஹ"

நமக்கு வேண்டிய வரத்தை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால் நிச்சயம் கேட்ட வரத்தை அவர்கள் நமக்கு அருள்வார்கள். மேலும் வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிகப்பெரிய அளவில் வலிமை இருக்கிறது.

உங்கள் கனவில் யானை வந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமா?

உங்கள் கனவில் யானை வந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமா?

எந்த நேரங்களில் நாம் அருகில் ததாஸ்து தேவர்கள் இருப்பார்கள் என்று நாம் அறிய மாட்டோம். அதனால்தான் பெரியவர்கள் நல்லதையே வீடுகளில் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US