ஜோதிடம்: 12 ராசிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன தெரியுமா?

By Sakthi Raj Feb 28, 2026 07:07 AM GMT
Report

 மனிதர்களாகிய எல்லோருக்கும் பலம் பலவீனம் என்ற இரண்டு பக்கங்கள் இருக்கும். அது அவரவர்கள் ராசியை பொறுத்து மாறுபடுகிறது. அப்படியாக 12 ராசிக்காரர்கள் உடைய பலம் மற்றும் பலவீனம் என்னவென்று பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசியினர் உடைய பலம் அவர்களின் நிர்வாகத்திறனில் சிறந்து விளங்குவது. ஆனால் இவர்களுடைய பலவீனம் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுப்பது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் ஒரு நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள். இருந்தாலும் இவர்களுடைய பிடிவாதம் தான் இவர்களின் பலவீனம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். ஆனால் இவர்களுடைய பலவீனம் இவர்களுடைய மன குழப்பம்.

கடகம்:

கடக ராசிக்காரர்களின் பலம் அவர்களுடைய வாழ்க்கை துணை. இவர்களுடைய பலவீனம் அதிக உணர்ச்சி வசப்படுதல் ஆகும்.

ஜோதிடம்: 12 ராசிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன தெரியுமா? | What Is The 12 Zodiac Sign Strength And Weakness

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

கேட்டதை அருளும் ததாஸ்து தேவர்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களின் பலம் இவர்களுடைய தலைமை பண்பு. ஆனால் இவர்கள் அவ்வப்போது தற்பெருமை பேசுவதனால் அதுவே இவர்களுக்கு பலவீனம் ஆகிவிடுகிறது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் எதையும் நேர்த்தியாக செய்வார்கள். ஆனால் இவர்களுடைய பலவீனம் அதிக அளவில் மனச்சோர்வு அடைந்து விடுவார்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் இவர்களுடைய பலம் இவர்களுடைய நுண்ணறிவு. ஆனால் இவர்களுடைய பலவீனம் முடிவெடுப்பதில் அதிகம் தயக்கம் காட்டுவார்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களின் பலம் இவர்களுடைய அதீத புத்திசாலித்தனம். ஆனால் இவர்களுடைய பலவீனம் முன்கோபம் ஆகும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களின் பலம் எப்பொழுதும் நிதானத்தை கையாளுவார்கள். ஆனால் பலவீனம் இவர்களுடைய மனம் உடனடியாக சாதாரண விஷயத்திற்கும் காயப்பட்டு விடும்.

2026 சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு திருமண யோகத்தை சனி கொடுப்பாராம்

2026 சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு திருமண யோகத்தை சனி கொடுப்பாராம்

மகரம்:

மகர ராசிக்காரர்களின் பலம் எதிலும் விடாமுயற்சியுடன் செய்வார்கள். இவர்களின் பலவீனம் இவர்களால் ஒரு நிமிடம் கூட தனியாக செயல்பட முடியாது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களின் பலம் எந்த காரியத்தை எடுத்தாலும் அதன் வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால் இவர்களுடைய பலவீனம் எப்பொழுதும் தேவை இல்லாத விஷயங்களை பற்றி யோசித்து கொண்டு இருப்பார்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களின் பலம் எதிலும் சாதித்து விட வேண்டும் என்ற குணம் இருக்கும். ஆனால் இவர்களின் பலவீனம் தோல்வியை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US