பல ஆண்டுக்கு பின்பு இரண்டு ராஜயோகங்கள்.... தீபாவளியில்அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசியினர்
தீபாவளி தினத்தற்கு உருவாகும் சக்தி வாய்ந்த இரண்டு ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
தீபாவளி இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜோதிட ரீதியாகவும் சில ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கின்றது.
ஜோதிடத்தின் படி தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் நிலையில், கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், அசுரர்களின் குருவான சுக்கிரன் துலாம் லாசியில் ஒன்றாக இணைகின்றனர்.
இத்தருணத்தில் சுக்ராதித்ய ராஜயோகமும், அதே நேரத்தில் சூரியன் புதன் ஒன்றாக இணைந்து புதாதித்ய ராஜயோகமும் உருவாகின்றது.
இவ்வாறு கிரகங்களின் நிலை பல ஆண்டுகளுக்கு பின்பு உருவாகின்றது. இதனால் சில ராசியினர் அதிர்ஷ்டத்தினையும் பெறுகின்றனர். அந்த ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த தீபாவளி பண்டிகை மங்களகரமானதாக இருப்பதுடன், எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியாக அமையும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், சொத்து தொடர்பான பிரச்சனையும் முடிவிற்கு வருமாம். இந்த காலத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கவும் செய்வீர்கள். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த தீபாவளி ராஜயோகமாக இருப்பதுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்குமாம். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றியாக மாறும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், நீண்ட நாள் கனவு நனவாகுமாம். பெற்றோரின் முழு ஆதரவை பெறுவீர்கள். பொறுப்புக்களையும் வெற்றிகரமாக மாற்றுவதுடன், கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த தீபாவளி ராஜயோகத்தினால் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், பணியிடத்தில் செயல்திறனால் உயர் அதிகாரிகளிடம் பாராட்டும் கிடைக்கும்.
வியாபாரிகள் நல்ல பலனை பெறுவதுடன், புதிய வீடு கனவு நனவாகுமாம். வணிகத்தில் உள்ளவர்கள் நல்ல லாபத்தினை பெறும் ஒப்பந்தம் கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.

மீனம்
மீன ராசியினருக்கு தீபாவளி ராஜயோகமானது குடும்பத்தில் மகிழ்ச்சியினை அளிப்பதுடன், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களும் ஏற்படும்.
திருமண வாழ்வில் சந்தோஷம் பெருகுவதுடன், தம்பதியினரிடையே அன்பு, நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் கனவும் நனவாகும்.
புதிய இலக்கினை நோக்கி பயணத்தை தொடங்குவதுடன், குடும்பத்தினருடன் நல்ல நேரத்தினையும் செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு, நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |