ஒரே மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகம்: அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்
கிரகங்களின் மாற்றத்தினால் இந்த மாதம் 3 ராஜயோகம் அரங்கேறும் நிலையில், இதில் அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் ராசியினரை குறித்து தெரிந்து கொள்வோம்.
கிரகங்களின் மாற்றம்
பொதுவாக ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றது. மேலும் வேறொரு கிரகங்களுடன் ஒன்றினையும் நிகழ்வினால், சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றது.
இந்த யோகங்கள் மனித வாழ்க்கையில் சில தருணத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இந்த வாரம் ஜூன் 06 ஆம் தேதி ஒரு ராஜயோகமும், ஜுன் 15ம் தேதி மற்றொரு ராஜயோகமும், பின்பு ஜுன் 29ம் தேதி மற்றொரு ராஜயோகமும் உருவாகின்றது.
என்னென்ன ராஜயோகம்?
முதல் ராஜயோகமானது, கிரகங்களின் இளவரசன் என்று கருதப்படும் புதன் தனது சொந்த ராசியான மிதுனத்திற்குள் நுழைகின்றார். இதனால் பத்ரா ராஜயோகம் உருவாகின்றது.
இரண்டாவதாக கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மிதுன ராசியில் ஏற்கனவே இருக்கும் புதனுடன் சூரியன் ஒன்றினைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாகின்றது.
மூன்றாவதாக அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். இதனால் மாளவ்ய ராஜயோகம் வருகின்றது.
இந்த ராஜயோகத்தினால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகின்றது. இதனால் நிதி ஆதாயம், தொழிலில் முன்னேற்றம், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்குமாம்.
கன்னி
இந்த மூன்று ராஜயோகத்தினால் கன்னி ராசியினருக்கு ஏராளமான நன்மைகள் உருவாகின்றது. இதனால் நிதி ஆதாயம், அதிகமான பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு, தொழிலில் முன்னேற்றம், குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையுமாம்.
ரிஷபம்
பத்ரா, புதாதித்ய மற்றும் மாளவ்ய ராஜயோகத்தினால் அதிர்ஷ்டமும் முழு ஆதரவும் கிடைக்குமாம். இதனால் வருமானம் உணர்வதுடன், பணியிடத்தில் உடன் வேலை செய்பவர்களின் ஆதரவும், பணம் சேமிப்பு, பதவி உயர்வும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த ராஜயோகத்தினால் வேலையில் நல்ல வெற்றி கிடைப்பதுடன், சுக்கிரனின் அருளினால் பொருள் இன்பங்களை பெறுவார்கள். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைப்பதுடன், அலுவலகத்தில் தனது இலக்குகளை அடைந்து வெற்றியடைவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |