இன்று ஆரம்பமாகும் சந்திர கிரகணம்... யாரை பாதிக்கும்? யாருக்கு அதிர்ஷ்டம்?

By Pavi Mar 03, 2026 07:23 AM GMT
Report

2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3 ஆம் தேதி பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:48 மணிக்கு முடிவடையும்.

 சந்திர கிரகணம்

ஜோதிடத்திலும் அறிவியல் படியும் சந்திர கிரகணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 2026ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3 பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:48 மணி வரை நிகழும்.

ஜோதிடத்தின் படி இந்த நேரத்தில் எல்லோரும் தங்கள் சுப விடயங்களை ஆரம்பித்தால் அது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகின்றது. இருந்தும் ஜோதிடத்தில் இந்த கிரகணம் மூலம் நான்கு ராசிகள் சிரமப்பட நேரிடும் என கூறப்படுகின்றது.

எனவே சந்திர கிரகணத்தின் அன்று இந்த ராசிகள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

இன்று ஆரம்பமாகும் சந்திர கிரகணம்... யாரை பாதிக்கும்? யாருக்கு அதிர்ஷ்டம்? | Lunar Eclipse Today Who Will It Affect And Lucky

சந்திர கிரகணத்தால் பாதிப்பு ஏற்படும் ராசிகள்

மேஷம்

  • இன்று நடைபெறும் இந்த சந்திர கிரகணத்தின் மூலம்  மேஷ ராசிக்காரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். 
  • நீங்கள் வீண் சர்ச்சைகள் அல்லது வாக்குவாதங்களைத் தவிர்த்து கொள்ளலாம். 
  • மேஷ ராசிக்காரர்கள் மரியாதை மற்றும் கௌரவத்தை காப்பாற்றுவது உங்கள் கைகளில் உள்ளது. 
  • நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். 

சிம்மம்

  • இன்றைய சந்திர கிரகணத்தால் சிம்ம ராசிக்காரர்களின் உடல்நலம் பதிக்க நேரிடும்.
  • நீங்கள் சாப்பிடும் உணவில் கவனம் தேவை. 
  • நீங்கள் எந்த விடயத்தை செய்ய முன்னரும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். 

கடகம்

  • கடக ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் எதிர்மறை தாக்கம் அதிகமாகும்.
  • இந்த நேரத்தில் நிதி இழப்பு, மரியாதை குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
  • விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  
  • பயணங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

தனுசு

  • தனுசு ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தின் தாக்கத்தால் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.
  • மற்றவர்களுடன் வாதிடுவதை தவிர்ப்பது நல்லது.
  • பொறுமையாக இருங்கள் எல்லா விடயத்தையும் நேர்மறையாக கடந்து செல்லுங்கள். 

இன்று ஆரம்பமாகும் சந்திர கிரகணம்... யாரை பாதிக்கும்? யாருக்கு அதிர்ஷ்டம்? | Lunar Eclipse Today Who Will It Affect And Lucky

பலன் பெறும் ராசிகள் எவை?

  • 2026இன் சந்திர கிரகணத்தால் ரிஷபம், மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும். இந்த ராசிகள் கிரகணத்தின் பலனாக தொழிலில் முன்னேறி செல்வார்கள். 
  • கடின உழைப்பாளிகள் இந்த கால கட்டத்தில் சிறந்த லாபத்தை பெறுவார்கள். 
  • எங்கும் முதலீடு செய்யலாம் அது உங்களுக்கு லாபத்தை மட்டுமே கொடுக்கும். 
  • குடம்பத்தில் உங்களை சுற்றி உள்ளவர்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். 

அசுப பலன் ராசிகளு்ககு என்ன பரிகாரம்?

சந்திர கிரகணத்தின் கிரகணத்தின் மூலம் மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு போன்ற ராசிகள் அசுப பலன்களை பெறும். இதை தவிர்கள்ள இந்த ராசிகள்  "ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா" என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

சந்திரனுக்கு இந்த மந்திரத்தை ஜபிப்பது உங்கள் அசுப பலன்களை தவிர்க்க உதவும்.  இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மேலும் பால், அரிசி அல்லது சர்க்கரை போன்ற வெள்ளை பொருட்களை நீங்கள் தானம் செய்யலாம். 



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US