மாங்கல்ய பலம் பெருக உதவும் தீப வழிபாடு
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள்.
சில திருமணமான சுமங்கலி பெண்களுக்கு ஜாதக ரீதியாக மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும்.
அந்தவகையில், சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு வணங்க வழிபட வேண்டும்.
இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாக நெற்றியில் குங்கும திலகம் இட்டுக்கொள்ள வேண்டும்.
திருமணமாகிய சுமங்கலிப் பெண்கள் நெற்றித் திலகத்துடன் தலை வகிட்டின் நுனியிலும் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பொட்டு வைக்கும்போது கிழக்குத் திசை நோக்கி நின்று வைப்பது பெண்களுக்கு லட்சுமி அருளைப் பெற்றுத் தரும் என்பது ஒரு நம்பிக்கை.
சுமங்கலிப் பெண்களின் மாங்கல்யம் பலம் பெருக, அவர்களது கணவர் நீடூழி வாழ உதவும் நிம்ப தீப வழிபாடு குறித்து பார்க்கலாம்.
நிம்ப தீப வழிபாடு
நிம்பதீபம் என்பது இலுப்பை எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு.
மேலும், மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும்.
குறிப்பாக நிம்ப தீபத்தை புதுஅகண்டம், அகல் இவைகளில் தான் ஏற்ற வேண்டும்.
இந்த தீப வழிபாட்டை செய்ய, செய்ய வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற முடியும்.
இதனால் குடும்பத்தினர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |