இன்றைய ராசி பலன்(14.02.2025)

Report

மேஷம்:

இன்று உறவினர்கள் சந்திப்பால் மனம் மகிழ்ச்சி அடையும்.பூர்விக சொத்தில் உண்டான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப பாராட்டுக்கள் கிடைக்கும்.

ரிஷபம்:

இன்று சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும்.திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.தாய் வழி உறவால் லாபம் பெறுவீர்கள்.அலைச்சல் அதிகரிக்கும்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

மிதுனம்:

மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும்.பழைய பிரச்சனை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.மனதில் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.

கடகம்:

எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்:

மனதில் உள்ள குழப்பம் விலகும்.சிலர் வியாபாரம் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.மனம் போல் இன்று நடந்து கொள்வீர்கள்.செயல்களில் உண்டான தடை விலகும்.நன்மையான நாள்.

கன்னி:

மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும்.பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு செய்வதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும்.

துலாம்:

நண்பர்கள் துணையுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.உடல் சம்பந்தமான விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.சிலருக்கு மதியம் மேல் நல்ல செய்திகள் வந்து சேரும்.நண்பர்கள் துணையாக இருப்பார்கள்.

ஜோதிடம்:எந்த ராசிக்காரர்களை புரிந்து கொள்வது மிகவும் கடினம்

ஜோதிடம்:எந்த ராசிக்காரர்களை புரிந்து கொள்வது மிகவும் கடினம்

விருச்சிகம்:

திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவீர். உங்கள் விருப்பம் நிறைவேறும்.நேற்று இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று நிறைவேறும்.திருமண வயதினருக்கு வரன் வரும்.

தனுசு:

தந்தை வழி உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.சிலர் பிள்ளைகள் எதிர்க்கலாம் பற்றிய சிந்தனை செய்வார்கள்.மூத்த பிள்ளையுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

மகரம்:

புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் செயல்கள் இழுபறியாகும் நாள்.தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். அலைச்சல் அதிகரிக்கும்.

கும்பம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வரவு செலவில் கவனம் தேவை. முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.

மீனம்:

குடும்பத்தில் உங்களுக்கு மதிப்புகள் உண்டாகும்.வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.இன்று சமுதாயத்தில் தைரியமாக செயல்படுவீர்கள்.எதிர்பார்த்த பணம் வரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

    

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US