நினைத்தது நடக்க செய்யும் மாசி பௌர்ணமி வழிபாடு
நம்முடைய இந்து மதத்தில் பௌர்ணமி என்றாலே அன்றைய தினம் இறைசக்தி அதிகம் காணப்படும் என்று நம்பிக்கை உண்டு. மேலும், இன்றைய நாளில் நாம் இறைவனை வழிபட நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
அப்படியாக, இன்று 13.3.2025 வியாழக்கிழமை பௌர்ணமி அன்று மாலை 6:30 மணிக்கு மேல் நிலவு உதயமான பிறகு, நிலவை முதலில் தரிசனம் செய்து, சந்திர பகவானை வழிபாடு செய்துகொள்ளவேண்டும்.
பிறகு, அன்றைய இரவு அம்மன் வழிபாடு செய்வது சிறந்த பலனை தரும். முடிந்தவர்கள் பௌர்ணமி மாலை அன்று பிரத்தியங்கிரா, வாராஹி, அங்காளம்மன், ஊர் மாரியம்மன், பத்ரகாளி போன்ற தெய்வங்களை தரிசனம் செய்வது உடலிலும் மனதிலும் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
சிலருக்கு, வாழ்க்கையில் என்ன செய்தாலும் தொடர் தடைகள் வந்து கொண்டு இருக்கும். எவ்வளவு பரிகாரம் செய்தாலும் நல்ல தீர்வு கிடைத்திருக்காது. அதற்கு அவர்களை சூழ்ந்து இருக்கும் எதிர்மறை ஆற்றலே காரணம்.
அப்படியானவர்கள், பௌர்ணமி இரவு உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படியாக, இவ்வாறு அம்மன் கோயில்களுக்கு சென்ற பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை உங்கள் தலையை சுற்றி அந்த கோவிலில் இருக்கும் சூலத்தில் குத்தி விடலாம்.
அதோடு, இரண்டு மண் அகல் விளக்குகளை தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த கோவிலிலேயே அமர்ந்து அம்பாளை மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளலாம். பிறகு, அம்பாளை 21 முறை வளம் வந்தும் உங்களுடைய பிரார்த்தனையை சொல்லலாம்.
இவ்வாறு, மனம் உருகி வேண்டுதல் வைக்க நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாறுதல் நடக்கும். மேலும், நினைத்தது நடக்க பௌர்ணமி இரவு தியானம் செய்தால் எண்ணற்ற ஆச்சிரியங்களை நாம் உணரலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |