2026: கேது பெயர்ச்சியால் வாழ்க்கையில் மிக பெரிய உச்சத்தை தொடப்போகும் 4 ராசிகள்
கேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கின்ற நேரத்தில் சுக்ரன் உடன் சேர்ந்து சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறார். அதிலும் குறிப்பிட்டு சில ராசிகள் அவர்கள் நீண்ட நாட்களாக பொருளாதார சிக்கலில் இருந்து அவர்கள் விடுபட போகிறார்கள்.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு கேது பகவானுடைய பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற கஷ்டங்கள் யாவும் விலகி நன்மை தர போகிறார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
இவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பாராத நன்மைகள் நடக்கப்போகிறது. நீண்ட நாட்களாக கடனில் சிக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான அற்புதமான வாய்ப்பு உண்டாகும்.
வியாபாரத்தில் இவர்கள் தொடர்ந்து சந்தித்து வந்த நஷ்டம் யாவும் விலகி நல்ல லாபம் பெறப்போகிறார்கள். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் நல்ல மரியாதையும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு கேது பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் இவர்கள் எடுக்கின்ற எல்லா முயற்சிகளிலும் இவர்கள் வெற்றி பெற போகிறார்கள். குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் மன அமைதியும் ஆன சூழல் உண்டாகும்.
ஒரு சிலருக்கு வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகம் கட்டாயம் கிடைக்கும். வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். வேலைக்காக செல்கின்ற பயணம் இவர்களுக்கு நன்மையை செய்யும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு லாப வீட்டில் கேது பகவான் நுழைவதால் இவர்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மன நிம்மதி நிறைந்ததாகவும் இருக்க போகிறது. இவர்கள் வருமானத்தை உயர்த்துவதற்கான பல வழிகளில் உழைக்க போகிறார்கள்.
பூர்வீக இடத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் யாவும் விலகப் போகிறது. நீண்ட நாட்களாக பணம் கைக்கு வராத நிலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணம் வந்து சேர போகிறது. மன அமைதி கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசிகளுக்கு கேது பெயர்ச்சி இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறது. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்கின்ற யோகம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்கான எல்லா வேலையும் சிறப்பாக அமையும்.
தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் சந்தித்து வந்த சிக்கல் யாவும் விலகும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பொருளாதாரத்தில் சந்தித்து வந்த சிக்கல் யாவும் விலகும். நீங்கள் நினைத்த பொருட்களை வாங்கி மகிழக்கூடிய அற்புதமான காலகட்டம் அமையப்போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |