வீடுகளில் துளசி செடி அடிக்கடி காய்ந்து போகிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்
நம்முடைய இந்து மதத்தில் துளசி செடி என்பது மிகவும் ஆன்மீகம் நிறைந்த செடியாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறது. மேலும் துளசி இருக்கின்ற இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். ஆதலால் வீடுகளில் துளசி செடி வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இருப்பினும் வீடுகளில் அவ்வப்போது துளசி செடி காய்ந்து விடுகிறது.
இவை மிகவும் கெட்ட சகுனமாகவே கருதப்படுகிறது. அப்படியாக வீடுகளில் துளசி செடி காய்ந்து விடுகிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
துளசி செடியை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதாது. அதை பராமரிப்பதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது. அதாவது அதிகமாகவும் நாம் தண்ணீர் ஊற்றி விட்டால் வானிலை மாற்றங்களால் அவை அழுகக் கூடும். அதனால் ஒரு சில விஷயங்களை நாம் முறையாக கடைபிடிக்க வேண்டும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மஞ்சள் நீர்:
இயற்கை புஞ்சை எதிர்ப்பு பொருளாக கருதக்கூடிய இந்த மஞ்சளை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் என கலந்து துளசி இலைகளில் தெளிக்க வேண்டும். மஞ்சளில் இருக்கக்கூடிய பாக்டீரியா பண்புகள் பூச்சிகளில் இருந்து செடியை நமக்கு பாதுகாத்து கொடுக்கிறது.
தேயிலை தூள்:
வீடுகளில் பயன்படுத்தப்பட்ட தேயிலைத் தூள் ஒரு இயற்கை உரமாகவே செயல்படுகிறது. ஆதலால் நன்கு உணர்த்திய தேயிலை தூளை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை துளசி செடியின் மண்ணில் சேர்த்தால் ஆரோக்கியமாக வளரும்.
கற்பூர நீர்:
குளிர் காலத்தில் கருப்பு புழுக்கள் துளசி செடியை பாதிக்ககூடும். அதை விரட்ட கற்பூரம் தண்ணீரில் கலந்து துளசி செடிகள் ஊற்றுங்கள். அது நல்ல நறுமணத்தை கொடுப்பதோடு பாதுகாப்பாகவும் வைக்கும்.
வேப்ப இலை தூள்:
வேப்பிலை இலைகளை உலர்த்தி பொடியாக அரைத்துக் கொண்டு மாதத்திற்கு ஒருமுறை துளசி செடியின் மண்ணில் சேர்த்து வர புஞ்சை மற்றும் பூச்சிகளில் இருந்து துளசி செடியை பாதுகாக்கும்.

பால் மற்றும் தண்ணீர் கலவை:
ஒரு கப் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி பச்சை பாலை கலந்து வாரத்திற்கு ஒரு முறை துளசி செடியில் ஊற்றி வந்தால் மண்ணில் ஈரப்பதத்தை அவை தக்க வைத்து செடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அவை கொடுக்கிறது.
விறகு சாம்பல்:
துளசி செடியில் மண்ணில் சிறிது விறகு சாம்பலை சேர்க்க வேண்டும். இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் செடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
விதைகளை வெட்டுதல்:
துளசிச் செடியில் உருவாகக்கூடிய விதைகள் தோன்றியுடன் வெட்டி விட வேண்டும். இதனால், செடியில் புது கிளைகள் வளர்ந்து ஆரோக்கியமாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |