வைகையில் எழுந்தருளும் கள்ளழகர் - நேரலை வீடியோ காட்சிகள்
சைவமும், வைணவமும் இணைந்த ஒருங்கிணைந்த ஒற்றுமை பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது, பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என மதுரை மாநகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சித்திரை திருவிழாவுக்காக மதுரை நகர் நோக்கி தங்க பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர், அவரை வரவேற்கும் எதிர்சேவை நேற்று நடந்தது.
தோல் பைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகர் வரவேற்கும் பாடல்களுடன் பக்தர்கள் வரவேற்றனர்.
இன்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு வந்து தங்க குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டவர், வைகையில் எழுந்தருளினார், கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் முழக்கம் விண்ணை முட்டியது.
விடிய விடிய கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் காத்திருந்தனர், தீப்பந்தம் ஏந்தியும், தோல் பைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திகடனை செலுத்தினர்.