டில்லியை ஆளும் ஓர் மீனாட்சி
தமிழகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இருக்கிறது.மீனாட்சி அம்மா என்றாலே அன்பானவள் கனிவானவள் வீரமானவள்.தன்னுடைய பக்தர்களை தாய் போல் காப்பாற்றி வருபவள்.
அப்படியாக மதுரை போல் டில்லியில் அம்மா மீனாட்சி ஆண்டு வருகிறாள்.தன்னுடைய பக்தர்களின் துயரை தீர்த்து வருகிறாள்.இப்பொழுது டில்லியை ஆளும் மீனாட்சி பற்றி பார்ப்போம்.
அம்மா மீனாட்சி என்று வாயார சொல்லவே பாவம் போகும்.மன கவலை நீங்கும்.மதுரையில் அதிக கடையின் பெயர் மீனாட்சியும் அதிக மக்களின் பெயரும் மீனாட்சி என்று இருப்பதை பார்க்க முடியும்.
அப்படியாக டில்லியில் ஷாலிமார் பாக்கில் உள்ளது இக்கோயில்.இக்கோயிலில் சக்தி கணபதி, சுப்பிரமணியர், துர்கை, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் இங்கு உள்ளன.
மனைவியருடன் நவக்கிரகங்கள் உள்ளனர். சித்திரையில் மீனாட்சி திருக்கல்யாணமும் , நவராத்திரியின் போது கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடக்கின்றன.
கடந்த கும்பாபிஷேகத்தின் போது 108 தம்பதி பூஜை, சுமங்கலி, வடு பூஜைகள் நடந்தன. ஒருமுறை லட்சதீபத்தின் போது பெண் குரங்கு (மந்தி) பங்கேற்றது.
மீனாட்சி கலாசார மையம் சார்பில் கர்நாடக இசை வகுப்பும், வேதங்களை பரப்புவதற்காக 'வேதிக் சமாஜம்' என்னும் அமைப்பும் உள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |