கேட்ட வரம் கிடைக்க.., மகா சிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
இந்த மகா சிவராத்திரி தினத்தில், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடினார் என்று நம்பப்படுகிறது.
இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.
சிவராத்திரி விரத வகைகள்
ஈசனை நினைத்து வழிபடும் சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
- நித்திய சிவராத்திரி
- மாத சிவராத்திரி
- பட்ச சிவராத்திரி
- யோக சிவராத்திரி
- மகா சிவராத்திரி
சிவனை வழிபடும் முறை
மகா சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் அறியாமல் செய்த பாவங்களுக்கு கூட பரிகாரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மகா சிவராத்திரி இரவில் சிவபெருமானை நினைத்து வழிபட்டால், மோட்சம் பெற வழி கிடைக்கும்.
பக்தர்கள் சிவராத்திரி இரவு முழுவதும் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள்.
சிவபெருமானுக்கு பால், தேன், பழங்கள், மலர்கள் போன்றவற்றில் அபிஷேகம் செய்து "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை மனமுருகி கூறி சிவபெருமானின் அருளைப் பெறுவார்கள்.
ஈசனை நினைத்து, இரவு முழுவதும் கண் விழித்திருப்பார்கள்.
மேலும், பக்தர்கள், சிவன் கோயில்களுக்கு சென்று, சிவபெருமானை தரிசனம் செய்து சிவனின் ஆசியை பெறுவார்கள்.