நம்மை வியப்பில் ஆழ்த்தும் கர்ணனின் குணங்கள்
நாம் கர்ணனை பற்றி கேள்வி பட்டு இருப்போம்,அதாவது உதவி என்று கர்ணனை நாடினால் கையில் இருக்கும் அனைத்தையும் கர்ணன் கொடுக்க தயங்கமாட்டார் என்பது நாம் அனைவரும் அறிவோம்.அப்படி பட்ட வள்ளல் கர்ணன் பிறப்பால் சத்ரியன்.
ஆனால் கர்ணன் வீரத்தில் சிறந்து விளங்கினார். இருந்தாலும் எதையும் முறையாய் கற்று தெளிய வழிகாட்ட குரு வேண்டும் அல்லவா ?
அதனால் துரோணாச்சாரியாரிடம் கர்ணன் சென்று தனக்கு ஆசிரியராக இருக்க அவரை வேண்ட அவரோ மறுத்து விடுகிறார்.
பிறகு கிருபாச்சாரியாரை சந்திக்க காலை பொழுதில் கர்ணன் சந்திக்க செல்ல,அப்பொழுது மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தசொல்கிறார் குரு.
அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான். அடுத்ததாக கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று.
ஒரு கணம் பறவையை வானில் குறிபார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.
மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம்.உடனே ஏன் இப்படி செய்தாய் கர்ணன் என்று காரணம் கேட்க "குருவே இது மிகவும் அதிகாலை நேரம்.
இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள்.
இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன்" என்றானாம்.
கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று.
எத்தனை பெரிய ஆற்றல்கள் கடவுள் நமக்கு வரப்பிரசாதமாக கொடுத்தாலும் நாம் அறிவை தக்க சமயத்தில் பயன் படுத்தாவிடில் எல்லாம் பாவ செயல்களாகும் என்பதற்கு கர்ணனின் செயல் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது.
ஆக நாமும் நம்மை நிரூபிக்க எதையும் உடனே செய்யவேண்டும் என்று இல்லை.யோசித்து அதனால் பலன் என்ன நஷ்டம் என்ன என்பதை சிந்தித்து செயல் பட நாம் வாழ்க்கை அழகாய் மாறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |