மகாபாரதம்: நதிகள் சொல்லும் கர்மவினை ரகசியம் என்ன?
நம்முடைய இந்திய மரபில் நதிகள் என்பது வெறும் நீர்நிலைகள் மட்டும் அல்ல. அவை நினைவுகள், அற நெறிகள் மற்றும் வாழ்க்கையில் தொடர்ச்சியை குறிக்கக்கூடிய உயிரோட்டமான அடையாளங்களாகவே போற்றப்படுகிறது.
அந்த வகையில், மனிதர்கள் வாழ்க்கையில் தர்மம் எவ்வளவு முக்கியம், மனவலிமை எவ்வளவு அவசியம் என்று பல்வேறு விஷயங்களை நமக்கு எடுத்துரைக்கிறது. அப்படியாக, மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய நதிகள் வெறும் இயற்கை காட்சியாக மட்டுமே இடம்பெறவில்லை.
அவை ஒருவரின் பிறப்பு, சபதம், போர் மற்றும் புனித யாத்திரை என பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கும் சாட்சியாகவே விளங்குகிறது. மனிதர்களுடைய துயரங்களையும் தவறு செய்வதிலிருந்து மீண்டு வரக்கூடிய தருணங்களையும் அமைதியாக கடந்து செல்கிறது.

அதோடு, ஒவ்வொரு நதியும் கர்மவினை தத்துவத்தை உணர்த்துகின்ற ஒரு ஆசிரியராகவும் திகழ்கிறது. அதைவிட முக்கியமாக நீரைப் போலவே நம்முடைய வாழ்க்கையும் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு ஏற்பவே வாழ்க்கையும் அதனுடைய போக்கை அமைத்துக் கொள்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
கங்கை – உயர்ந்த கடமையை உணர்த்தும் நதி:
மகாபாரதத்தில் கங்கா நதியை நாம் பிரித்துப் பார்க்கவே இயலாது. ஹஸ்தினாபுரத்தின் மன்னரான சாந்தனு கங்கைதேவியின் மீது காதல் கொள்கிறார். பிறகு இவர்களுக்கு பிறந்த தேவவிரதன் பின்வரும் நாட்களில் மகாபாரதத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவரான பீஷ்மராக புகழ் பெறுகிறார்.
அதாவது, கங்காதேவி தனக்கு பிறந்த முதல் 7 குழந்தைகளையும் ஆற்றில் மூழ்கடித்த நிகழ்வு முதலில் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சியையும் ஒரு வேதனையையும் கொடுக்கலாம்.

ஆனால், மகாபாரதத்தில் தெய்வீகப் பின்னணிகள் அந்த செயல்கள் ஒரு பெரிய தெய்வீக நோக்கத்தின் ஒரு பகுதிகளாகவே இருந்திருக்கிறது. இந்த இடத்தில் மகாபாரதம் மீண்டும் மீண்டும் நமக்கு வலியுறுத்தக் கூடிய ஒரு உண்மை மனிதர்களுடைய வாழ்க்கையில் புரிதலுக்கு அப்பாற்பட்ட பல சக்திகளும் ஆற்றல்களும் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது என்பதேயாகும்.
அப்படியாக, கங்காதேவி உயர்ந்த கடமைக்கும், உயர்ந்த பக்திக்கும் அடையாளமாக விளங்குகிறார். சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்திருந்தாலும் அவளுடைய புனித தன்மையை இழக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். கங்கையின் மகனான பீஷ்மரும் தனது சபதத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டு தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சிகளை எல்லாம் தியாகம் செய்து வாழ்ந்தார்.

இதன் வழியாக நாம் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு பாடம் மிகவும் தெளிவானது. வாழ்க்கை சில நேரங்களில் தியாகத்தையும் பொறுமையையும் எதிர்பார்க்கிறது. ஆக, நதியைப் போல உண்மையின் பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
இல்லை என்றால் ஓர் இடத்தில் தேங்கி நின்ற மாசடைந்து விடுவோம். ஆதலால், வாழ்க்கையிலும் ஒரு நோக்கமற்ற ஒரு தேக்கம் என்பது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இலட்சியத்துடன் முன்னேறுவது நமக்கு ஒரு தெளிவான பாதையையும் சிந்தனையையும் கொடுக்கும் என்பதே ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
குறிப்பு:
இந்த எழுத்து வாசகர்களுக்கு சிந்தனை மற்றும் அறிவூட்டும் நோக்கத்திற்காக எழுதப்பட்டது. மகாபாரதம் தொடர்பான கதைகள் மற்றும் விளக்கங்கள் பல்வேறு மரபுகளில் வேறுபடலாம்.