மஹாளய அமாவாசை: இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் முன்னோர்களின் வடிவமாம்

By Sakthi Raj Oct 10, 2026 09:05 AM GMT
Report

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த 2026 ஆம் ஆண்டு மஹாளய அமாவாசை அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

மஹாளய அமாவாசை என்பது பொதுவாக 16 நாட்கள் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருகை தந்து அவர்களுடைய சந்ததியினருடன் தங்கி உணவு அருந்துவதாக நம்பப்படுகிறது.

அதனால், இந்த காலகட்டங்களில் நாம் எந்த ஒரு சுபகாரியங்களும் செய்வதில்லை. தர்ப்பணம் மற்றும் பிற சடங்குகள் வழியாக முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி அடைய மட்டுமே நாம் பிரார்த்தனை செய்வோம்.

மஹாளய அமாவாசை: இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் முன்னோர்களின் வடிவமாம் | Mahalaya Amavasya Are Babies Born Ancestors

மகாளய அமாவாசை: முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?

மகாளய அமாவாசை: முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?

அந்த வகையில், அமாவாசையில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அவை மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகள் குடும்பத்திற்கு அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார்கள். அதாவது இந்த குழந்தைகளுக்கு அவர்களுடைய முன்னோர்களின் முழு ஆசீர்வாதமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மஹாளய அமாவாசை: இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் முன்னோர்களின் வடிவமாம் | Mahalaya Amavasya Are Babies Born Ancestors

2026: நவம்பர் 11 உதயமாகும் புதன்.. எந்த ராசிகளுக்கு திருப்பங்கள் காத்திருக்கிறது?

2026: நவம்பர் 11 உதயமாகும் புதன்.. எந்த ராசிகளுக்கு திருப்பங்கள் காத்திருக்கிறது?

மஹாளய அமாவாசையில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டத்தால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஆகியவை உள்ளது. இந்த குழந்தைகள் சிறு வயதில் இருந்தே ஒரு நல்ல பொறுப்புணர்வுடனும் குடும்பத்தை கவனித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நல்ல ஞானமும் முதிர்ச்சியும் அவர்களிடத்தில் நாம் பார்க்கலாம்.

இவர்களுடைய செயல்கள் வழியாக சமுதாயத்தில் ஒரு நல்ல மரியாதையை பெறுகிறார்கள். மேலும், இவர்களுக்கு அதிக உணர்வு உணர்திறன் இருப்பதால் சில நேரங்களில் இவர்கள் தவறான முடிவுகள் எடுக்கவும் வாய்ப்பு உள்ளதால் மன அழுத்தமும் குழப்பங்களும் சந்திக்க வேண்டி இருக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US