மங்கள கேது யுதி- ஜூலை 28 தேதி மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசி இவர்கள் தான்
வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி துலாம் ராசியில் செவ்வாய் மற்றும் கேதுவின் நிகழ்வு நடக்கவுள்ளது. இந்த நிகழ்வு ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக, துலாம் ராசி சமநிலை, உறவுகளிடத்தில் நல்ல அன்பும், வாழ்க்கையில் நீதி நேர்மையாகவும் வாழும் ராசியினர் ஆவார்கள்.
ஆனால், செவ்வாய் கிரகமோ வீரம், கோபம், போராட்டத்தின் காரணியாக இருந்தாலும், கேது துறவு, மர்மம் மற்றும் சுய உணர்தலைக் குறிக்கிறது. இவ்வாறு இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை ஒன்றாக நடக்கும் பொழுது இவர்கள் மனதில் அமைதியின்மை, போராட்ட குணம், போன்றவை உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
இந்த நிகழ்வு துலாம் ராசிக்கு மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக, செவ்வாய் மட்டும் கேது பகவான் ஒருவர் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் அவர்கள் அன்றைய நாளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த சேர்க்கை திடீர் மன அழுத்தம், பதட்டத்தை உண்டாக்கலாம். அதனால் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நாளில் இவர்களுக்கு சில நன்மைகளும் நடக்க உள்ளது.
இந்த காலகட்டத்தில் ஆன்மீக வளர்ச்சி மற்றும் தியானம் போன்ற செயல்களில் ஈடுபாடு செலுத்துவார்கள். இந்த நாளில் மன அமைதியைக் கடைப்பிடித்து மௌனம் மேற்கொண்டால் மனதில் தெளிவு உண்டாகும்.
மேலும், ஜூலை 28 ஆம் தேதி துலாம் ராசியினர் எந்த ஒரு மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகளில் ஈடுபாடு செலுத்தாமல் பேச்சுக்களில் கவனமும் நிதானமும் கடைப்பிடிக்க வேண்டும்.
அன்று துலாம் ராசியினர் நன்மை உண்டாக சிவப்பு நிற ஆடைகளை அணியலாம். செவ்வாய்- கேதுவின் தாக்கம் குறைய ஹனுமன் சாலிசா படிப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







