மாங்கல்ய தோஷம் விலக நாம் செய்யவேண்டிய பரிகாரங்கள்

By Sakthi Raj Apr 04, 2024 06:13 AM GMT
Report

ஒரு பெற்றோர்க்கு சந்தோஷமே பிள்ளைகளை வளர்த்து நன்றாக படிக்கவைத்து வேலைக்கு அனுப்பி திருமணம் செய்து பார்ப்பதில் தான்.

திருமணம் வயது வரும் பொழுது ஜாதகம் எடுத்து சென்று பார்க்கும் பொழுது தான் தெரியும் ஜாதகத்தில் சில தோஷங்கள் உள்ளது என்று.

மாங்கல்ய தோஷம் விலக நாம் செய்யவேண்டிய பரிகாரங்கள் | Mangalaya Dosham Temple Kumbakonam

அப்படி பல தோஷங்கள் இருக்கிறது. ஆனால் ஒருவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தால் கண்டிப்பாக அதற்கு பரிகாரம் செய்வது நல்லது.

உண்மையில் நாம் தோஷங்கள் கண்டு பயம் கொள்ள வேண்டாம். தோஷம் என்பதற்கு பரிகாரமும் அதற்கான ஆலயமும் நம் முன்னோர்கள் சொல்லி சென்று இருக்கின்றனர்.

மாங்கல்ய தோஷம் விலக நாம் செய்யவேண்டிய பரிகாரங்கள் | Mangalaya Dosham Temple Kumbakonam

அப்படியாக, ஒருவருக்கு திருமணத்தில் மாங்கல்ய தோஷம் இருக்க அவர்கள் வணங்கவேண்டிய ஆலயம் திருமங்கலக்குடியில் இருக்கும் பிராண வரதேஸ்வர்.

இங்கு இறைவன் திருப்பெயர் பிராண வரதேஸ்வர். இறைவி திருப்பெயர் மங்களநாயகி.

மேலும் இந்த தலத்தில் கூடுதல் விஷேசம் என்னவென்றால் இங்கு அமைந்து இருக்கும் விநாயகர், ஆலய விமானம், அம்பாள் மற்றும் தீர்த்தம் பெயர் எல்லாம் மங்களம் என அமைந்து இருப்பது தான்,  எனவே இந்த திருத்தலம் பஞ்சமங்கள திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது.  

மாங்கல்ய தோஷம் விலக நாம் செய்யவேண்டிய பரிகாரங்கள் | Mangalaya Dosham Temple Kumbakonam

தல வரலாறு

முதலாம் குலோத்தவன் காலத்தில் மந்திரி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மக்களிடம் வாங்கிய வரிப்பணத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினார்.

அந்த ஆலயம் தான் மங்கலக்குடி பிராண வரதேஸ்வர் ஆலயம். இப்படி மக்கள் வரிப்பணத்தில் ஆலயம் ஒன்று மந்திரி எழுப்பியுள்ளார் என்ற விஷயம், அறிந்த மன்னர் சினமுற்று மந்திரியை சிறைசேதம் செய்ய ஆணையிட்டார்.

தன் கணவனுக்கு  நேர்ந்த துயர செய்தியை அறிந்த மனைவி, மங்கலக்குடி மங்களநாயகி இடம் வந்து வேண்டினார்.

தன் கணவருக்கு எந்த பாதிப்பும் நேராமல் தன்னுடைய மாங்கல்ய பாக்கியத்தை பாதுகாத்து தருமாறு மனம் உருகி அம்மனிடம் பிராத்தனை செய்தார்.

மாங்கல்ய தோஷம் விலக நாம் செய்யவேண்டிய பரிகாரங்கள் | Mangalaya Dosham Temple Kumbakonam

ஆனால் மறுபக்கம், மந்திரி அரசரிடம் தன் உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு வேண்டினான்.

அவன் வேண்டுகோளுக்கு இணங்க மந்திரியின் உயிரற்ற உடலை எடுத்துக்கொண்டு திருமங்கலகுடியை அடைந்ததும் மங்களாம்பிகை அருளால் மந்திரிக்கு உயிர் பிறப்பித்தது.

தன் பக்தியின் மாங்கல்யத்தை காப்பாற்றி தோஷம் போக்கினாள் அம்பாள் மங்களாம்பிகை.

மந்திரிக்கு பிராணன் அதாவது உயிர் கொடுத்த சிவனார் பிராண வரதேஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.

மேலும் நவகிரகங்களின் தோஷத்தை நீக்கியவர் இத்தல இறைவன். இத்தலத்தை வழிபட்ட பிறகு அருகில் உள்ள சூரியனார் கோவிலையும் நம் வழிபட வேண்டும்.

எனவே ஒருவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தால் அதற்காக நாம் பயம் கொள்ளாமல் தோஷம் மற்றும் திருமண தடை நீங்க இங்கு வந்து பிராண வரதேஸ்வரவையும் மங்கள நாயகியும் வணங்கி நம் வாழ்வை மங்கலமாக அருள இறைவனை வேண்டி வழிபடுவோம்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US