பணக்கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும்.
வீட்டில் செல்வ கடாட்சம் பெருகவும் பணம் நிரந்தரமாக தங்கவும் பல தாந்திரீக வழிமுறைகள் இருக்கிறது.
இந்த பரிகாரத்தில் மகாலட்சுமி, குபேரர், சுக்கிரர், குரு, கேது பகவான் என அனைவரையும் நினைத்து செய்யப்படுவதால் பணம் கஷ்டம் தீரும்.
பணம் கொட்ட உதவும் பரிகாரம்
முதலில் ஜாதிக்காய், சுருள்பட்டை, ஏலக்காய் இவற்றை அரைத்த பவுடராக்கி தனியாக ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் இந்த பவுடருடன் சேர்க்க மல்லிகைப்பூ எண்ணெய் வேண்டும்.
ஏலக்காய் மகாலட்சுமி தாயார் சுக்கிரன் அருள் பெற்ற பொருள். அதேபோல் இந்த மல்லிகைப்பூ எண்ணெய் கேது பகவானை குறிக்கும்.
அத்துடன் இந்த பரிகாரத்தை வியாழக்கிழமைகள் செய்யும்போது குரு பகவான் அனுகிரகம் கிடைக்கும்.
இவற்றையெல்லாம் விட வியாழக்கிழமை மாலையில் குபேரருக்கு உகந்த நேரத்தில் செய்வதால் குபேர சம்பத்தும் ஏற்படும்.
அடுத்து திரியை மஞ்சளில் நனைத்து நிழலில் காய வைத்து எடுத்து 2 திரியை ஒன்றாக போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் முதலில் வீட்டு வாசலுக்கு வெளியில் சென்று இந்த பொடியை கையில் வைத்து மல்லிகைப்பூ எண்ணெயை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் இந்த மந்திரத்தையும் சொல்ல வேண்டும் .
"கிரகலட்சுமி தனம் தானியம் சௌபாக்கியம் தேகி தேகி நமக"
பல தடைகள் நீங்கி பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதிற்குள் மானசீகமாக வேண்டிக்கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு கையில் இருக்கும் இந்த பவுடரை வானத்தை நோக்கி ஊதி விட்டு கை கால்களை சுத்தமாக கழுவி விட வேண்டும்.
பிறகு வீட்டிற்குள் சென்று தயார் செய்து வைத்த மஞ்சள் திரியை அகல் விளக்கில் போட்டு தீபம் ஏற்றி அனைத்து தெய்வங்களையும் நினைத்துக்கொண்டு மனதார வழிபட வேண்டும்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் இதுவரை வராத பணம் எல்லாம் தேடி வரும், பணம் வருவதற்கான வாய்ப்புகளும் பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |