நிம்மதியான தூக்கத்திற்கு சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்
பொதுவாக மனிதனுக்கு அவனின் கிரகங்கள் சரி இல்லை என்றால் தூக்கமின்மை,உடல் உபாதைகள்,மனசோர்வு உண்டாகும்.ஏன் நன்றாக இருந்தவர்களுக்கு கூட நேரம் சரி இல்லாமல் போனால் மருத்துவமனையில் சேரும் நிலை ஏற்பட்டு விடும்.
இருந்தாலும் பெரும்பாலானவர்கள் நேரம் சரி இல்லாத பொழுது சந்திக்கும் ஒரு மிக பெரிய பிரச்சனை சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுவது தான்.எவ்வளவு வேலை செய்து,உடல் சோர்வோடு வந்து படுத்தாலும் அவர்களுக்கு சரியான தூக்கம் வருவதில்லை.அப்படியாக அவர்கள் மனதை நிதானம் செய்து,கோபம் எரிச்சல் எல்லாம் மறந்து நிம்மதியான உறக்கம் கொள்ள தியானம் செய்யலாம்.
அதை விட சிறந்த மாற்றத்தை கொடுக்க கூடியது வழிபாடு.பொதுவாக தூக்கம் வரவில்லை என்றால் சிலர் எண்ணங்களை 100ல் இருந்து பின்னோக்கி எண்ணிக்கொண்டு வருவார்கள்.ஆனால் அதற்கு பதிலாக நாம் தெய்வங்களுடைய மந்திரங்கள் உச்சரிக்க நம் மனம் சாந்தம் அடைந்து நல்ல தூக்கம் பெறலாம்.
நாம் இரவு சரியான தூக்கம் வராமல் துன்பப்படும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
மந்திரம்:1
யா தேவி சர்வபூதேஷு நித்ரா ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
மந்திரம்:2
அகஸ்திர் மாதவஷ்சைவ முசுகுந்தோ மஹாபல
கபிலோ முனிராஸ்தீக:பஞ்சைதே சுகஷாயின்
மந்திரம்:3
ராமம் ஸ்கந்தம் ஹனுமந்தம் வைனதேயம் வ்ருகோதரம்
ஷயனே ய: ஸ்மரேநித்யம் து:ஸ்வப்னஸ்தஸ்ய நஷ்யதி
மந்திரம்:4
நித்ராம் பகவதிம் விஷ்ணோ:
அதுல தேஜஸ: ப்ரபோ: நமாமி
பலன்கள்
நாம் இரவு உறங்க செல்லும் முன் அல்லது படுக்கையில் படுத்தவுடன்,மன அமைதியுடன் ஏதேனும் ஒரு மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.உங்களை அறியாமல் உங்களுக்கு தூக்கம் வந்து விடும்.
உங்கள் மனதில் உள்ள எதிற்மறை ஆற்றல் முற்றிலுமாக விலகி விடும்.மேலும் நாம் எப்பொழுதும் தூங்கும் முன் சாந்தமான கடவுள்களை நினைத்து கொள்வது அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |