சனி பகவானை வழிபடும் பொழுது மறந்தும் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்

By Sakthi Raj Jan 11, 2025 10:24 AM GMT
Report

 கிரகங்களில் சனி பகவான் மிகவும் கோபக்காரர்.அதனாலேயே பலரும் சனி பகவான் என்றால் மிகுந்த அச்சம் கொள்வார்கள்.இருந்தாலும் சனியை போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்றே சொல்லலாம்.

பொதுவாக சனி பகவான் நம்முடைய தவறுகளை உணரவைக்காமல் அவர் நகரமாட்டார்.அதே போல் தவறை உணர்ந்த நமக்கு நல் வாழ்வை வழங்காமலும் செல்லமாட்டார்.ஆக பலரும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுக்கு சனி திசை,சனி பெயர்ச்சி நடக்கும் பொழுது சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபாடு செய்வார்கள்.

அப்படியாக சனிபகவானை வழிபாடு செய்யும் பொழுது நாம் அவருக்கு பிடிக்காத சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.இல்லையென்றால் அவரின் கோபத்திற்கு ஆளாகக்கூடும் என்கிறார்கள்.அதை பற்றி பார்ப்போம்.

சனி பகவானை வழிபடும் பொழுது மறந்தும் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள் | 5 Things We Should Avoid While Worship Sanibagavan

1.சனி பகவானை வாழிபாடு செய்து விட்டு நகரும் பொழுது அவரை விட்டு சிறிது தூரம் பின்னோக்கி வந்த பிறகே திரும்பி செல்ல வேண்டும்.நம் முதுகை காண்பித்தவாறு வழிபாடு முடித்து செல்லக்கூடாது.அதே போல் வெகு நேரம் ஒரே இடத்தில் நின்றவாறு சனிபகவானை வழிபாடு செய்யக்கூடாது.

2.சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது என்பது அவரின் தாக்கத்தை முற்றிலுமாக குறைக்கக்கூடிய ஒன்றாகும்.அவ்வாறு எண்ணெய் வாங்கி கொடுக்கும் பொழுது போது இரும்பு பாத்திரத்தில் வைத்து தான் கொடுக்க வேண்டும்.

செம்பு போன்ற மற்ற உலோகங்கள், பாக்கெட்களில் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.அதாவது செம்பு என்பது சூரிய பகவானுக்குரியதாகும். சனியும், சூரியனும் எதிரெதிர் கிரகங்கள் என்பதால் செம்பு பாத்திரத்தில் எண்ணெய் வாங்கிக் கொடுக்கும் பொழுது அது சனி பகவானை அவமதிப்பதற்கு சமமாகும்.

சூரியன் சனி சேர்க்கை-இனி தான் இந்த 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்

சூரியன் சனி சேர்க்கை-இனி தான் இந்த 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்

3.சனி பகவானை எப்பொழுதும் நேருக்கு நேர் நின்று வழிபாடு செய்யக்கூடாது.அதே போல சனி பகவானிடம் விழுந்து கும்பிட்டு வணங்கக் கூடாது.எப்பொழுதும் அவரின் பாதங்கள் நினைத்தபடிதான் வணங்க வேண்டும்.அவரை பார்வை நேரடியாக நம் மீது படும் வகையில் நின்று வழிபட்டால் கஷ்டங்களும், தீய விஷயங்களும் தான் நடக்கும்.

4.சனி பகவானை வழிபாடு செய்யும் பொழுதும் மறந்தும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வழிபாடு செய்யக்கூடாது.அது அவரின் கோபத்திற்குரிய நிறமாகும்.எப்பொழுதும் சனி பகவானுக்கு பிடித்த கருப்பு அல்லது நில நிற ஆடைகளை தான் அணிந்து வணங்க வேண்டும்.

5.சனி பகவானை வழிபாடு செய்ய உகந்த திசையாக மேற்கு திசை ஆகும்.அந்த திசை தான் அவருக்குரிய திசையும்.ஆக அந்த திசையில் நின்று வழிபட வாழ்கைகையில் உள்ள கஷ்டம் விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US