சூரியன் சனி சேர்க்கை-இனி தான் இந்த 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்
ஜோதிடக்கணக்குகள் படி கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.அவ்வாறு மீன ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பதால், மகர ராசிக்காரர்கள் சடே சதியில் இருந்து விடுதலை பெறுவார்கள்.
அதே நேரத்தில் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுதலை பெறுவார்கள்.அதாவது, மார்ச் 29 அன்று, மீனத்தில் சனி மற்றும் சூரியன் இணைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மை தீமை செய்யப்போகிறது.
இருந்தாலும் மூன்று ராசிகள் சூரியன் சனி சேர்க்கையால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.அதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.கண் இமைக்கும் முன் பெரும் நஷ்டத்தை சந்திக்க கூடும்.அதே போல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சில நபர்கள் எதிர்பாராத நோய்களை சந்திக்கக்கூடும்.ஆதலால் போதுமானவரையில் எல்லா விஷயங்களிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அசுப பலன்களை கொடுக்கலாம்.திருமண வாழ்வில் பிரிவு,விவாகரத்து போன்ற சுழல் உண்டாகும்.மனதில் தேவை இல்லாத குழப்பங்கள்,ஆரோக்கியத்தில் பிரச்சனை போன்ற சூழ்நிலை சங்கடத்தை கொடுக்கும்.
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் முன்னோர்கள் சொத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.குடும்பத்தில் சகோதரன் சகோதிரி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம்.தொழில் செய்யும் இடத்திலும் அமைதியின்மை உருவாகும்.ஒரு சிலர் தேவை இல்லாத பிரச்சனையில் சிக்கி கொண்டு நீதி மன்றம் வாசல் வரை செல்லும் வாய்ப்புகள் உண்டு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |