12 ராசிகளும் சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அபிஷேக பொருட்கள்
மனிதனுக்கு இறைவழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று.இறைநம்பிக்கை தான் ஒரு மனிதனை அவனை அடுத்த கட்டம் முன்னேற்ற பாதைக்கு செல்லவும்,வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஒரு நம்பிக்கையாகவும் அமைகிறது.
அதே போல் இறைவழிபாட்டால் மனதில் தர்ம சிந்தனைகளும் நமக்கும் மேலே ஆட்டிவைக்கும் ஒருவர் இருக்கிறார் என்ற சுயசிந்தனையும் உதிக்க செய்யும்.ஒருவர் இன்று செய்யும் தீயவைகளில் இருந்து தப்பித்து விடலாம் ஆனால் என்றோ ஒரு நாள் அதற்கு வட்டியும் முதலுமாக நமக்கு ஒருவன் அனுப்புவான்.
அப்பொழுது அதை தாங்கி கொள்ள சக்தி இல்லாமல் பரிதவித்து,தவறை உணர்ந்து அவன் கால்களை பற்றி கொள்வதில் எந்த ஒரு பயனும் இல்லை.ஆக காலம் கடக்கும் முன் இறைவனை மனதில் கொண்டு,சக மனதிர்களிடம் அன்பு காட்ட பழகினாலே நம்முடைய கர்ம வினைகள் குறைய தொடங்கும்.
அதோடு சேர்த்து ஆலயம் சென்று வழிபாடுகள் செய்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய நம்முடைய சிந்தை தெளிவடையும்.மேலும் அபிஷேகம் செய்யும் பொழுது ஒவ்வொரு ராசிக்கு உரிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் பலன்களை பெறலாம்.
அப்படியாக 12 ராசிகளும் சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அபிஷேக பொருட்களை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு பன்னீர் சந்தனம் இந்த இரண்டு பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுக்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு சுத்தமான பசும்பால் சுத்தமான நெய் வாங்கிக் கொடுப்பது சிறப்பான பலனை தரும்.
மிதுனம்:
சிவபெருமானுக்கு நீங்கள் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்து அபிஷேகம் செய்தால் உங்களுக்கு உண்டான மிக பெரிய கண்டத்தில் இருந்து விலகுவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் சுத்தமான சந்தன கட்டை வாங்கி அதை கோவிலில் அமர்ந்து, நன்றாக இழைத்து அந்த சந்தனத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க உங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் படி படியாக குறையும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு மஞ்சள் நிற பூ, மஞ்சள் நிற வஸ்திரம், கிழங்கு மஞ்சள் இப்படி மஞ்சள் நிறத்தில் உள்ள பொருளை வாங்கி கொடுக்க உங்கள் வாழ்க்கையில் உண்டான தடைகள் விலகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் சிவன் கோவிலில் பிரசாதம் செய்ய வெல்லம் வாங்கி தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் பசும்பால் தயிர் இந்த இரண்டு பொருட்களை வாங்கி அபிஷேகத்திற்கு கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்கள் வில்வ இலைகளை உங்கள் கையால் மாலையாக கட்டிப் போடுவது சிறப்பான பலனை கொடுக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற பொருட்கள், மஞ்சள் நிற வஸ்திரம் வாங்கி தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் நல்லெண்ணெய், நெய் வாங்கி அபிஷேகத்திற்கு தானம் கொடுப்பது சிறப்பு.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் காப்பரிசியை தயார் செய்து நந்திக்கு நெய்வேத்தியம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் வாசனை திரவியங்களை வாங்கி ஈசனுக்கு தானமாக கொடுப்பதால் எதிரிகள் தொல்லை விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |