இந்த கவசங்களை படித்தால் தோஷங்கள் அண்டாதாம்
இறைவழிபாடுகளில் இறைவனுடைய மந்திரங்களுக்கு அதிக அளவில் சக்தி உண்டு. மேலும், ஒருவருக்கு எப்பேர்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும் மனதார இறைவனை நினைத்து அமர்ந்து மந்திரங்களை பாராயணம் செய்யும் பொழுது அவர்கள் அந்த கஷ்டங்களில் இருந்து படிப்படியாக வெளியே வருவதை நாம் காணலாம். அப்படியாக, நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோஷங்கள் விலக என்ன கவசம் படிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

1.கனகதாரா ஸ்தோத்திரம்:
உங்களுக்கு தீராத கடன் பிரச்சனை இருக்கிறது அல்லது கைகளுக்கு வரக்கூடிய பணம் வரவில்லை என்றால் கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கலாம்.
2. சுதர்சன கவசம்:
தீராத வியாதிகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால் சுதர்சன கவச பாராயணம் செய்யும் பொழுது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட வியாதிகளில் இருந்து விடுபடலாம்.
3. அஷ்ட லட்சுமி கவசம்:
தொழிலில் வளர்ச்சி அடையவும் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறவும் அஷ்ட லட்சுமி கவசம் படிக்கலாம்.
4. அனுமன் கவசம்:
எதிரிகளால் தொல்லை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபட அனுமன் கவசம் படிக்கும் பொழுது விரைவில் பிரச்சனை தீரும்.
5. சந்தான கோபால கவசம்:
நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்துபவர்கள் சந்தான கோபால கவசம் படிக்கும் பொழுது குழந்தை வரம் சீக்கிரம் கிடைக்கும்.
6. ருத்ர கவசம்:
உங்களுடைய ஜாதகத்தில் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக ருத்ர கவசம் படிக்கலாம்.
7. நீல சரஸ்வதி கவசம்:
நினைத்த வேலைகள் உங்களுக்கு விரைவில் கிடைக்க மற்றும் பிடித்த வேலை வர நீல சரஸ்வதி கவசம் படிக்கலாம்.
8. நரசிம்ம கவசம்:
ஏவல் பில்லி சூனியம் இவற்றிலிருந்து விடுபட நீங்கள் நரசிம்ம கவசம் பாராயணம் செய்யும் பொழுது விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |