நாளைய ராசி பலன் (07-05-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சமுதாய சிந்தனைகள் மேலோங்கும். தேவை இல்லாத விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
ரிஷபம்:
புதிதாக திருமணமான தம்பதியினருக்கு நற்செய்தி கிடைக்கும். அத்தை வழி உறவுகளால் இருந்த சிக்கல் விலகும். அரசாங்க தொடர்பான விஷயங்களில் இருந்த கசப்புகள் விலகும்.
மிதுனம்:
வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று நல்ல நாள். மனதிற்கு பிடித்தவர்களிடம் இருந்து நற்செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
இன்று மனதில் தேவையில்லாத குழப்பங்களும் பதட்டமும் உண்டாகும். சுயமாக முடிவெடுத்து செயல்படுவது அவசியம். எதிர்கால தேவைக்கான சில விஷயங்களை செய்து கொள்வீர்கள்.
சிம்மம்:
நீண்ட நாட்கள் கைகளுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடன் கவனமாக பேசுவது அவசியம். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.
கன்னி:
சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். காதல் வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் விலகும். வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பொறுமையாக இருப்பது நல்லது.
துலாம்:
மனதிற்கு ஆறுதலான சில செய்திகள் வந்து சேரும். உங்களின் கனவுகள் நிறைவேறும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த கசக்புகள் விலகும். நன்மையான நாள்.
விருச்சிகம்:
தேவை இல்லாமல் அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நினைத்த வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு:
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சற்று கவனமாக இருங்கள். உங்களை சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
இன்று மனதில் தேவையில்லாத எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். காலை முதல் மனம் சற்று பதட்டமாக காணப்படும்.
கும்பம்:
நண்பர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வரவு செலவுகளில் எச்சரிக்கை வேண்டும். தாய் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மீனம்:
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வழக்கு நல்ல முடிவை பெறும். உறவினர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிற மொழி பேசும் நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |