2025:புத்தாண்டு அன்று நாம் சொல்லவேண்டிய ஒரு வரி மந்திரம்
புத்தாண்டு உலகம் எங்கிலும் வாழும் எல்லா மக்களுக்கும் ஒரு மிக பெரிய சந்தோசம் கொடுக்க கூடிய நாள் ஆகும்.காரணம் நாம் கடந்த வருடத்தை வெற்றிகரமாக கடந்து விட்டோம்.இப்பொழுது வாழ்க்கையின் அடுத்த கட்டம் நோக்கி செல்கின்றோம்.
அப்படியாக நாம் பல விஷயங்களை அன்றைய நாளில் செய்வது மிக அவசியம்.முதலில் நல்ல எண்ணம் மனதில் கொள்ள வேண்டும்.அதாவது எல்லோரும் சமயங்களில் ஆழ்ந்த சிந்தனைக்கு செல்வது இயல்பு.அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம் என்பது முக்கியமாகும்.
அதாவது ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது நம்மை அறியாமல் நாம் எண்ணங்களுக்கு அதிக சக்தி உண்டாகும்.அதனால் தான் பெரியவர்கள் எண்ணங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.
அப்படியாக இந்த புத்தாண்டில் நாம் என்ன செய்யப்போகின்றோம்,எதாவது தவறுதலாக நடந்து விடுமோ என்று அச்சம் கொள்ளாமல்,வருவது நன்மையில் முடியும்.எது வந்தாலும் தைரியமாக எதிர்கொண்டு சரி செய்து விடலாம் என்ற எண்ணம் வளர்த்து கொள்ள அந்த எண்ணம் போல் அந்த வருடம் அமையும்.
அப்படியாக ஒவ்வொரு நாளும் புதுமையானது தான்.அதில் சில நாள் இன்பம் வரலாம்,பல நாள் துன்பம் அனுபவிக்கலாம்.துன்பம் வரும் வேளையில் மனம் முதலில் தேடுவது இறைவனைத்தான்.நாம் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும்,எத்தனை தானம் தர்மம் செய்தாலும்,நேரம் சரி இல்லை என்றால்,காலத்தின் கைதியாக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
என்னதான் துன்பம் அனுபவித்தாலும்,நாம் செய்த நல்ல விஷயம் எப்பொழுதும் ஒரு கைகொடுத்து தாங்கி பிடித்து கொண்டு நிற்கும்.அதோடு இறைவன் அருள் இருந்தால் நாம் நிச்சயம் எவ்வளவு பெரிய துன்ப போரும் கடந்து விடலாம்.
அந்த வகையில் துன்ப காலத்தில் விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இருந்து இந்த ஒரு வரி மந்திரம் சொல்ல இறைவன் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
மந்திரம்:
‘ஓம் ஸர்வத்ருஸே நமஹ”.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆயிரம் நாமங்கள் உள்ளது. அதில் ஒரு நாமம் தான் இது. 201வது மந்திர வார்த்தை இது. இந்த மந்திரத்திற்கு அர்த்தம் என்னவென்றால் “எல்லா கஷ்டங்களையும் அந்த கடவுளை பார்த்துக் கொள்வான்”. என்பதுதான்.
ஆக அதீத மனக்கஷ்டத்தால் அவதி படும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.இறைவன் உடன் இருந்து பிரச்சனையை சமாளிக்கும் திறன் கற்றுக்கொடுப்பான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |