2025ஆம் ஆண்டு சிறப்பாக அமைய செய்ய வேண்டிய வழிபாடு
இன்று தான் 2024 ஆண்டின் கடைசி நாள்.ஆக இன்று இரவு 12 மணிக்கு புது வருடம் பிறந்து விடும்.மனிதனுக்கு புதிய விஷயங்கள் மீது எப்பொழுதும் ஒரு வித ஈர்ப்பு இருக்கும்.அதே போல் தான் புத்தாண்டும் புதிய தொடக்கம் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றோம்.
பலருக்கும் கடந்த வருடம் பல விதமான சந்தோசம் கொடுத்திருக்கும்,சிலருக்கு எதிர்பாராத நஷ்டங்கள் துன்பங்கள் கொடுத்திருக்கலாம்.அவை எல்லாம் கடந்த காலம்.கிரகங்களின் சூழ்நிலையால் கூட நாம் அதீத துன்பம் அனுபவித்திருக்கலாம்.
இருந்தாலும் வாழ்க்கையின் ரகசிய பெட்டியில் நமக்காக நிச்சயம் நாம் எதிர்பார்த்ததை விட பலமடங்கு நன்மையை கடவுள் நமக்கு ஒளித்து வைத்திருப்பார்.அதை அனுபவிக்க சற்று பொறுமையும்,நம்பிக்கையும் அவசியம்.அப்படியாக புதிய வருடம் தொடங்கும் பொழுது நாம் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
சாஸ்திரத்தில் மாதா,பிதா,குரு,தெய்வம் என்று தான் சொல்லுவார்கள்.அந்த வகையில் முதலில் நம் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது மிக அவசியம்.அம்மா,அப்பா,தாத்தா பாட்டி என்று வீட்டில் உள்ள பெரியவர்களை சந்தித்து ஆசி வாங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.
மனிதன் ஒன்றை சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.வீட்டில் உள்ள பெரியவர்களை உதாசீனம் செய்து எத்தனை குலதெய்வம் ஏறி இறங்கினாலும்,எத்தனை ஈசனை தரிசனம் செய்தாலும் அவர்களின் வேண்டுதல் நிறைவேறாது.
உங்கள் வாழ்க்கையில் உண்மையில் மாற்றம் வேண்டும் என்றால் தாய் தந்தை குருவிடம் மரியாதையுடனும்,பண்பாகவும் நடந்து கொள்ளுங்கள்.உங்கள் மாற்றத்தை அங்கு இருந்து தொடங்க,எந்த ஒரு கிரக மாற்றம் நிகழ்ந்தாலும் நம்முடைய சிறந்த பண்பால் அதனுடைய தாக்கம் குறைவதை பார்க்க முடியும்.
அதோடு இக்கட்டான சூழலிலும் இறைவன் கைகொடுத்து நம்மை காப்பதை பார்க்கமுடியும்.ஆக கஷ்டம் ஏற்படுகிறது என்றால் கடவுள் உங்கள் நடைமுறையை கவனிக்க சொல்கிறார்.அதை கவனித்து திருத்தி கொண்டு இறைவனை சரண் அடைய அவன் உங்களை அணைத்து கொள்வான்.
அதே போல் சுத்தமான மனமும்,இடமும் தான் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.புத்தாண்டிற்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.புத்தாண்டு அன்று காலையில் குடும்பத்துடன் சேர்ந்து பூஜை செய்து வீட்டிற்கு சாம்பிராணி தூபம் போட்டு,உங்கள் கைகளால் முடிந்த நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்யுங்கள்.
இதனால் மனம் புத்துணர்ச்சி பெரும்.அந்த சந்தோஷமே ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.அதோடு அருகில் உள்ள ஆலயம் சென்று குடும்பமாக வழிபாடு செய்து வரலாம்.முடிந்தால் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாழிபாடு செய்வது கூடுதல் சிறப்பு.
கோயிலுக்கு செல்லும் பொழுது வெறுங்கையாக செல்லாமல் பூக்கள் அல்லது மாலை வாங்கி இறைவனுக்கு சாற்றி வழிபாடு செய்து வாருங்கள்.வாழ்க்கையில் துன்பம் எல்லாம் படிப்படியாக குறைவதை பார்க்க முடியும்.
வாழ்க்கை மிக எளிமையான ஒன்று தான்,அவை நம் எண்ணத்தில் இருந்து தான் தொடங்கிறது.எப்பொழுதும் மனதை கனமாக வைத்துக்கொள்ளாமல்,அதில் நிறைந்த அன்பும் பிறரை மதித்து நடக்கும் பண்பும் வைத்திருக்க நினைத்ததை சாதிக்கலாம்.இந்த குணம் இருந்தாலே நாம் பாதி பரிகாரம் செய்யவேண்டியதில்லை.இறைவன் அவனாக வந்து நமக்கு ஆசீர்வாதம் செய்வான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |