2026: நாளை யுகாதி பண்டிகை அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்
தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி பண்டிகை மார்ச் 19ஆம் தேதி அதாவது நாளை பிறக்க இருக்கிறது இந்த் யுகாதி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு அன்றைய நாளில் நாம் சிறப்பு வழிபாடுகள் செய்தால் நிச்சயம் நமக்கு அதிர்ஷ்டமும் செல்வ வளமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
இந்த பண்டிகைகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுடைய பாரம்பரிய முறைப்படி மாறுபட்ட விதங்களில் இந்த யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

யுகாதி 2026 தேதி, நேரம் :
யுகாதி பண்டிகை 2026 தேதி - மார்ச் 19 வியாழன்
பிரதமை திதி ஆரம்பம் - மார்ச் 19 காலை 07.30 பிரதமை திதி
நிறைவு - மார்ச் 20 காலை 04.59
சைத்ர மாதத்தில் வரும் பிரதமை திதியில் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகாதி என்பது யுகம் + ஆதி இரண்டு சொற்களின் சேர்க்கை ஆகும். அதாவது யுகம் தோன்றிய நாள் என்பது இதனுடைய பொருள். புராணங்களின்படி பிரம்மதேவர் இந்த தினத்தில் தான் பிரபஞ்சத்தை படைக்க துவங்கினார் என்று நம்பப்படுகிறது.

யுகாதி பண்டிகையை வட இந்தியாவிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது வாழ்க்கையில் கசப்பான பழைய அனுபவங்கள், துன்பங்கள் இவை எல்லாம் மறந்து புதிதாக துவங்க வேண்டும் என்று உணர்த்துவது இந்த யுகாதி பண்டிகையின் நோக்கமாகும். இந்த யுகாதி பண்டிகையின் ஒரு முக்கியமான சிறப்பு அம்சங்கள் இருக்கிறது.
அன்றைய நாள் நாம் மறக்காமல் பச்சடி செய்து அனைவருக்கும் பரிமாற வேண்டும். அதாவது யுகாதி பச்சடி சாப்பிட்ட பிறகு நாம் மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். அதில் ஆறு வகையான சுவைகள் அடங்கி இருக்கும்.
மற்றொரு முக்கியமான விஷயம் இந்த யுகாதி பண்டிகையில் பஞ்சாங்கம் படிப்பார்கள். இந்த நாளில் பஞ்சாங்கம் படிப்பதும் கேட்பதும் மிகவும் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது. மேலும் யுகாதி பண்டிகை முன்னிட்டு நம்முடைய வீடுகளில் "ஓம் நமோ பகவததே வாசுதேவாய" என்ற மந்திரங்களை உச்சரிப்பதின் வழியாக நம்முடைய குடும்பத்தில் செல்வ வளமும் ஆரோக்கியமும் மன அமைதியும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |