விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்

By Sakthi Raj Sep 06, 2024 08:46 AM GMT
Report

முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகு தான் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய தொடங்குவோம்.ஏன் எதை புதிதாக எழுத வேண்டும் என்றாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்ட பிறகு தான் எழுதுவோம்.இன்னும் சொல்ல போனால் சில இந்து பள்ளிகளில் காலையில் விநாயகர் பாடல் பாடி தான் அவர்கள் வகுப்பு தொடங்கும் பழக்கமும் இருக்கிறது.

அபப்டியாக நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சொல்லவேண்டிய மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் | Mantras To Chant On Vinayagar Chathurthi

ஞாயிறு

வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்,

நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு­,

துப்பார் திருமேனித்தும் பிக்கை யான்பாதம் ,

தப்பாமல் சார் வார் தமக்கு.

திங்கள் 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை ,

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய்,

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் ,

சங்கத் தமிழ் மூன்றும் தா.

செவ்வாய் 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை ,

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை ,

நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் ,

புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

புதன்

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த ,

தொல்லைபோம்; போகாத் துயரம்போம் ,

நல்லகுணமதிக மாமருணைக் கோபுரத்தில் மேவு,

கணபதியைக் கைதொழுக் கால்.

சோழரின் மனைவியால் கட்டப்பட்ட சிவன் கோயில்

சோழரின் மனைவியால் கட்டப்பட்ட சிவன் கோயில்


வியாழன் 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்,

விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே,

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்,

கண்ணிற் பணிமின் கனிந்து.

வெள்ளி

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா

பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே

சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தைச் சங்கரிக்கும்

எங்கள் குலவிடிவிளக்கே எழில் மணியே கணபதியே!

சனி

திருவாக்கும் செய்கருமம் கைக்கூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் -உருவாக்கும் ,

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்,

காதலால் கூப்புவர் தம்கை.

இந்த மந்திரங்கள் சொல்லி வர உண்மையில் ஜாதகத்தில் இருந்த தடங்கல் விலகி வாழ்க்கையில் நல்ல மாற்றம் உருவாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US