வீடுகளில் துளசியை பறிக்கும் பொழுது இந்த மந்திரம் சொல்ல தவறாதீர்கள்

By Sakthi Raj Sep 01, 2026 10:28 AM GMT
Report

நம்முடைய இந்து மதத்தில் துளசி தேவி மகாலட்சுமியின் அதிபதியாக போற்றி வழிபாடு செய்யப்படுகின்றாள். மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் துளசி செடி கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு துளசி செடியை வைத்து நம் வீடுகளில் வளர்க்கின்ற போது பெருமாளுடைய முழு அருளும், மகாலட்சுமி தேவியின் ஆசிர்வாதமும் நமக்கு குறைவின்றி கிடைக்கும்.

மேலும், ஒரு சில வீடுகளில் தினமும் அதிகாலையில் எழுந்து துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி அவர்கள் துளசி தேவியை வலம் வந்து வழிபாடு செய்வது உண்டு. மேலும், ஒரு சில வீடுகளில் துளசியை பறித்து பெருமாளின் திரு உருவப்படத்திற்கு மாலையாக சமர்ப்பிப்பார்கள்.

அந்த வகையில், நாம் ஒவ்வொரு முறையும் துளசி பறித்து வழிபாடு செய்வதற்காக எடுக்கின்ற பொழுது சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம்.

வீடுகளில் துளசியை பறிக்கும் பொழுது இந்த மந்திரம் சொல்ல தவறாதீர்கள் | Mantras To Chant On While Plucking Tulasi

2026: செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள்

2026: செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள்

மந்திரம்:

துளசி அம்ருத ஸம்பூதே ஸகாத்வம் கேசவப் பிரியா
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபனே.

இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி துளசியை பறித்து பூஜை செய்கின்ற பொழுது நமக்கு துளசி தேவியின் முழு அருள் கிடைக்கிறது. அதை போல், மகாலட்சுமி தாய் மனம் குளிர்ந்து நாம் செய்கின்ற பூஜைக்கேற்ப நற்பலன்களையும் வேண்டுதல்களையும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கிறாள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US