பொங்கல் அன்று குடும்பத்துடன் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள்.தை மாதம் மனிதர்களுக்கு பல வகையில் நன்மையை கொண்டு வந்து சேர்க்கும் மாதம் ஆகும்.அப்படியாக இன்றைய தினத்தில் எல்லோரும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வீட்டு வாசலில் பொங்கல் வைத்து சூரியபகவானை வழிபாடு செய்வார்கள்.
அதேபோல்,பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தை மாதம் பிறந்து படிப்படியாக குறைவதை பார்க்கமுடியும்.அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தை பொங்கல் திருநாளில் குடும்பத்துடன் சேர்ந்து அனைத்து தெய்வங்களுடைய மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அப்படியாக குடும்பமாக அமரத்து சொல்லி வழிபட வேண்டிய மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
மந்திரங்கள்:
ஓரெழுத்து மந்திரத்தை “ஓம்” என்று சொல்லுவோம்
இரண்டெழுத்து மந்திரத்தை “ராமா” என்று சொல்லுவோம்
மூன்றெழுத்து மந்திரத்தை “முருகா” என்று சொல்லுவோம்
நான்கெழுத்து மந்திரத்தை “நாராயணா” என்று சொல்லுவோம்
ஐந்து எழுத்து மந்திரத்தை “நமச்சிவாயா” என்று சொல்லுவோம்
ஆறு எழுத்து மந்திரத்தை “சரவணபவ” என்று சொல்லுவோம்
ஏழெழுத்து மந்திரத்தை “முத்தீஸ்வரர்” என்று சொல்லுவோம்
எட்டெழுத்து மந்திரத்தை “ஓம் ஸ்ரீ குருவாயூர் அப்பா” என்று சொல்லுவோம்
ஒன்பது எழுத்து மந்திரத்தை “ஓம் பராசக்தி அம்மா” என்று சொல்லுவோம்
பத்து எழுத்து மந்திரத்தை “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லுவோம்.
ஆக இவ்வளவு அற்புதம் நிறைந்த சக்தி வாய்ந்த அனைத்து தெய்வங்களின் மந்திரத்தை நாம் குடும்பமாக அமர்ந்து சொல்ல நம்முடைய மனதில் நிம்மதி உண்டாகும்.அதே போல் குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்மறை வினைகள் முற்றிலுமாக விலகி சந்தோசம் நிலவும்.
இவை எல்லாம் மிகவும் எளிதான அனைவரும் சொல்லக்கூடிய மந்திரம் தான்.ஆக பொங்கல் அன்று மட்டும் அல்லாமல் தினமும் இந்த மந்திரங்கள் சொல்லி வழிபட நேர்மறை ஆற்றல் பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |