இன்றைய ராசி பலன்(04.03.2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள்.உங்கள் வாழ்க்கை ரகசியத்தை பிறரிடம்,பகிர்ந்து கொள்ள வேண்டாம்.ஒருமுறைக்கு பல முறை எதையும் யோசித்து செயல்படுங்கள்.நன்மை உண்டாகும்.
ரிஷபம்:
இன்று மனத்தில் தேவை இல்லாத பயமும் பதட்டமும் உண்டாகும்.குடும்பத்துனருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.வழக்கு விஷயங்கள் வெற்றியை கொடுக்கும்.
மிதுனம்:
இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவாகும்.உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
பெரியோர் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் தந்தைவழி உறவுகளால் நடந்தேறும்.பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். வழிபாட்டில் பங்கேற்பீர்.
கன்னி:
இன்று உங்கள் வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.இரண்டாம் திருமணம் செய்யவேண்டும் என்பவருக்கு நல்ல வரன் அமையும்.தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.கவலை அதிகரிக்கும்.
துலாம்:
உங்களுக்கு தொழிலில் சில சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ளவது அவசியம்.உடல் நிலையில் சில மாற்றங்கள் தோன்றும்.கவனம் அவசியம்.தாய் வழி உறவால் நன்மை உண்டாகும்.
விருச்சிகம்:
உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்.நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். உற்சாகத்துடன் செயல்படுவீர்.வருமானம் அதிகரிக்கும்.
தனுசு:
பிள்ளைகள் வழியில் நன்மை உண்டாகும்.இறைவழிபாடு அதிகரிக்கும்.மனதில் தேவை இல்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ளாமல் இருப்பது நல்லது.நன்மையான நாள்.
மகரம்:
உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். நிதானமாக செயல்படுவது அவசியம். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். பணப்புழக்கம் கூடும்.
கும்பம்:
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பீர்கள்.பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம் வரும். மனதில் உற்சாகம் தோன்றும்.
மீனம்:
இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.மன அமைதி உண்டாகும்.சிலருக்கு வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |