இன்றைய ராசி பலன்(05.03.2025)

Report

மேஷம்:

இன்று நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.மனதில் தெளிவும் சந்தோஷமும் பிறக்கும்.வேலையில் பாராட்டுக்கள் பெறுவீர்கள்.

ரிஷபம்:

இன்று வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

மிதுனம்:

மனதில் உள்ள குழப்பங்கள் விலகும்.குடும்ப பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.சகோதிரி வழியில் சில இடர்பாடுகள் சந்திக்க நேரிடலாம்.கவனமாக செயல்படுவதால் ஆபத்து விலகும்.

கடகம்:

இன்று சொந்தங்கள் மத்தியில் உங்கள் முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருகையால் லாபம் பெறுவீர்கள்.

சிம்மம்:

இன்று தாய் வழி உறவால் சில சண்டைகள் உருவாகலாம்.எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படவேண்டும்.குழந்தைகள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நன்மை தரும்.

இந்த 5 இலைகளை வைத்து பூஜை செய்து பாருங்கள் - நினைத்தது நடக்கும்!

இந்த 5 இலைகளை வைத்து பூஜை செய்து பாருங்கள் - நினைத்தது நடக்கும்!

கன்னி:

குடும்பத்தினர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.சிலருக்கு கணவன் வழி உறவால் மன சங்கடம் உருவாகும்.வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நன்மை அளிக்கும்.

துலாம்:

இன்று நீங்கள் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடைபெறும்.குடும்பத்தில் முக்கியமான நபரின் வருகையால் சில மாற்றங்கள் நடக்கும்.தந்தையால் மனதில் சந்தோசம் உண்டாகும்.

விருச்சிகம்:

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.உழைப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

தனுசு:

மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.சந்தோஷமான செய்தி உங்களை தேடி வரும்.சகோதரன் வழி உறவால் நல்ல ஆதரவு கிடைக்கும்.நன்மையான நாள்.

மகரம்:

சாதுரியமாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.செயலில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும். கவனமாக செயல்படுவது நல்லது.

கும்பம்:

எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும்.விருப்பங்களால் விவகாரம் உண்டாகும். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் மனம் செல்லும்.அமைதி காக்க வேண்டிய நாள்.

மீனம்:

பிள்ளைகளால் நன்மை பெறுவீர்கள்.நிலம் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக அமையும்.ஒரு சிலருக்கு திடீர் தொலை தூர பயணம் செல்ல நேரிடலாம்.நிதானம் அவசியம்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US